Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img

அஜித், அல்லு அர்ஜுன் படங்களிலிருந்து தேவிஸ்ரீ பிரசாத் அதிரடி நீக்கம்

ஐதராபாத்: ‘புஷ்பா 2’ படத்தின் பின்னணி இசை பணியில் இருந்து தேவிஸ்ரீ பிரசாத் நீக்கப்பட்டுள்ளார். அவருக்கு பதிலாக புதிய இசையமைப்பாளர் அறிவிக்கப்படுவார் என்று தகவல்கள் வெளியான நிலையில், இசையமைப்பாளர் சாம் சிஎஸ் ‘புஷ்பா 2’ படத்தில் இணைந்ததாக தனது சமூக வலைத்தளத்தில் உறுதி செய்துள்ளார். சென்னையில் நடந்த ’புஷ்பா 2’ புரமோஷன் நிகழ்ச்சியில், தேவி ஸ்ரீ பிரசாத் கலந்து கொண்டார். அப்போது, அவர் மற்றும் படத்தின் தயாரிப்பாளர், இயக்குனர் இடையே ஏற்பட்ட சில கருத்து வேறுபாடுகள் குறித்து மனம் திறந்து பேசியிருந்தார். இதன் விளைவாக அவர் படத்திலிருந்து நீக்கப்பட்டதாக கூறப்படுகிறது. மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் ’புஷ்பா 2’ படத்தில் மட்டுமின்றி அஜித்தின் நடிப்பில் உருவாகி வரும் ‘குட் பேட் அக்லி’ என்ற படத்திலும் தேவி ஸ்ரீ பிரசாத் நீக்கப்பட்டுள்ளார். இந்த படத்தையும் மைத்ரி மூவி மேக்கர்ஸ்தான் தயாரிக்கிறது. அவருக்கு பதிலாக ஜி.வி. பிரகாஷ் இந்த படத்தில் இசையமைப்பாளராக இணைய உள்ளார் என்ற தகவல் உறுதியாகியுள்ளது.