Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img

அஜித் படம்: ஜி.வி. சூசக பதில்

மகிழ் திருமேனி இயக்கத்தில் அஜித் குமார், திரிஷா, ரெஜினா, அர்ஜூன், ஆரவ் நடித்துள்ள ‘விடாமுயற்சி’ படம் வரும் பொங்கலன்று திரைக்கு வருவதை படக்குழுவினர் உறுதி செய்துள்ளனர். இந்நிலையில், ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித் குமார், திரிஷா நடிக்கும் ‘குட் பேட் அக்லி’ படம் உருவாகி வருகிறது. இப்படத்தின் பின்னணி இசையை ஜி.வி.பிரகாஷ் குமார் மேற்கொள்கிறார் என்ற தகவல் வெளியானது. ஆனால், படக்குழு அறிவிக்கவில்லை. இதில் அஜித் குமார் 3 கெட்டப்புகளில் நடிக்கிறார். முக்கிய வேடங்களில் சுனில், ‘பிரேமலு’ நஸ்லென், பிரசன்னா, அர்ஜூன் தாஸ், யோகி பாபு நடிக்கின்றனர்.

பாடல்களுக்கு தேவி பிரசாத் இசை அமைக்கிறார். இப்படத்துக்கு பின்னணி இசை அமைப்பது குறித்து ஜி.வி.பிரகாஷ் குமார் தனது எக்ஸ் தளத்தில், ஒரு ரசிகர் கேட்ட கேள்விக்கு சூசகமாக பதிலளித்து உறுதி செய்துள்ளார். மேலும் அவர் அளித்துள்ள பேட்டி ஒன்றில், ‘இப்போது நான் இரண்டு முன்னணி நட்சத்திரங்கள் நடிக்கும் இரு படங்களுக்கு பின்னணி இசை அமைத்து வருகிறேன். அதில் ஒரு படத்தின் ஹீரோவுக்கு தீம் மியூசிக் அமைத்துள்ளேன். அது அந்த ஹீரோவின் ரசிகர்கள் தங்கள் செல்போனின் காலர்டியூனாக மாற்றும் நேரம் வந்துவிட்டது’ என்று கூறியுள்ளார்.

அஜித் குமார் நடித்த ‘குட் பேட் அக்லி’ என்ற படத்தையே அவர் குறிப்பிட்டுள்ளார் என்று நினைத்த அஜித் குமாரின் ரசிகர்களும், நெட்டிசன்களும் அவரது பேட்டியை வைரலாக்கி வருகின்றனர். சமீபத்தில் ஜி.வி.பிரகாஷ் குமார் இசை அமைத்த ‘அமரன்’, ‘லக்கி பாஸ்கர்’ ஆகிய படங்கள் மாபெரும் வெற்றிபெற்றது மட்டுமின்றி, பாடல்கள் ஹிட்டாகி, பின்னணி இசைக்கும் அதிக வரவேற்பு கிடைத்தது.