Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img

அஜித் குமாரின் ஆவணப்படம் ரிலீஸ்

அஜித் குமாரின் சர்வதேச மோட்டார் ஸ்போர்ட்ஸ் பயணத்தையும், ரேஸிங் களத்தில் அவர் சந்தித்த சவால்களையும் பதிவு செய்துள்ள ‘கிளாடியேட்டர்ஸ் - இன் பர்சூட் ஆஃப் சேலஞ்சஸ்’ என்ற ஆவண திரைப்படம், வரும் அக்டோபர் மாதம் திரைக்கு வருகிறது. ‘குட் பேட் அக்லி’ என்ற படத்துக்கு பிறகு சர்வதேச ரேஸிங் போட்டிகளில் கவனம் செலுத்தி வரும் அஜித் குமார், ‘அஜித் குமார் ரேஸிங்’ என்ற அணியின் மூலம் பல்வேறு சர்வதேச பந்தயங்களில் பங்கேற்று இந்தியாவுக்கு பெருமை சேர்த்துள்ளார். ‘குட் பேட் அக்லி’ என்ற படத்தை தொடர்ந்து மீண்டும் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் நடிக்கும் அஜித் குமாரின் 64வது படமாக உருவாகும் இதற்கு ‘டேர் டெவில்’ என்று பெயரிடப்பட்டுள்ளது.

இதை அஜித் குமாரின் மனைவியும், நடிகையுமான ஷாலினி தயாரிக்கிறார். ‘கிளாடியேட்டர்ஸ் - இன் பர்சூட் ஆஃப் சேலஞ்சஸ்’ என்ற ஆவண திரைப்படத்தை ஏ.எல்.விஜய் எழுதி இயக்கியுள்ளார். ஜி.வி.பிரகாஷ் இசை அமைத்துள்ளார். துபாய், அபுதாபி மற்றும் ஐரோப்பிய மோட்டார் ஸ்போர்ட்ஸ் தொடர்களான Asian Le Mans மற்றும் 24H Series போட்டிகளில் அஜித் குமார் பங்கேற்ற தருணங்கள் நேரடியாக பதிவு செய்யப்பட்டுள்ளன. பிலிப் சாரியட் மோட்டார் ஸ்போர்ட்ஸ் சார்பில், இத்தாலியின் வெனிஸ் நகரில் இந்த ஆண்டுக்கான ஜென்டில்மேன் ஓட்டுநர் விருது அஜித் குமாருக்கு வழங்கப்பட்டது.

ரேஸிங் களத்தில் அஜித் குமார் எதிர்கொண்ட சவால்கள், பின்னடைவுகள், கடினமான தருணங்கள் மற்றும் 2025 துபாய் 24H போட்டியில் அவர் போடியம் வென்ற வரலாற்று சாதனை, அவரது முழுமையான சர்வதேச ரேஸிங் பயணம் இப்படத்தில் இடம்பெற்றுள்ளது.