Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img

அஜித் குமார் தாயார் காலமானார் முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி

சென்னை: பிரபல நடிகரும், கார் பந்தய வீரருமான அஜித் குமாரின் தாயார் தாயார் மோகினி மணி (84), கடந்த சில மாதங்களாக உடல்நலக்குறைவு காரணமாக சிகிச்சை பெற்று வந்தார். மேலும், வயது மூப்பு காரணமாக அவதிப்பட்ட அவர், நேற்று காலை சென்னையிலுள்ள வீட்டில் காலமானார். சென்னை பாலவாக்கத்தில் இருக்கும் அஜித் குமார் வீட்டில் மோகினி மணியின் இறுதிச்சடங்கு நடக்கிறது.

இத்தகவல் வெளியானதை தொடர்ந்து, சமூக வலைத்தளங்களில் அஜித் குமாரின் ரசிகர்கள் அவருக்கும், அவரது குடும்பத்தினருக்கும் இரங்கல் தெரிவித்தனர். கடந்த 2023 மார்ச் 24ம் தேதி அஜித் குமாரின் தந்தை பி.சுப்பிரமணியம் (84) காலமானார். சில ஆண்டுகளாக பக்கவாதம் காரணமாக பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த அவர், வயது மூப்பு உள்பட பல்வேறு பிரச்னைகள் காரணமாக காலமானார். நேற்றிரவு அஜித் குமாரின் தாயார் உடலுக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி செலுத்தினார்.