மும்பை: பாலிவுட் முன்னணி கவர்ச்சி நடிகை மலைக்கா அரோராவின் சகோதரியும், நடிகையுமான அம்ரிதா அரோரா (45), கடந்த சில வருடங்களாக திரைப்படங்களில் நடிக்காமல் ஒதுங்கியிருந்த நிலையில், சகோதரியின் ரியாலிட்டி ஷோ நிகழ்ச்சியில் மட்டும் தலைகாட்டி வந்தார். இந்நிலையில் அவரது சமூக வலைத்தளத்தில், தனது அதிரடி உடல் எடை குறைப்பு போட்டோக்களை பகிர்ந்ததை தொடர்ந்து, அவர் ‘ஓசெம்பிக்’ அல்லது ‘மவுஞ்சாரோ’ போன்ற ஆபத்தான எடை குறைப்பு மருந்து பயன்படுத்தியதாக இணையதளங்களில் தகவல் பரவியது.
இது குறித்து விளக்கம் அளித்த அம்ரிதா அரோரா, ‘கடந்த சில வருடங்களாக எனது சொந்த வாழ்க்கையில் மிகவும் மோசமான நிலையில் இருந்தேன். அதை ஒரு சவாலாக ஏற்று, கடந்த சில மாதங்களில் தீவிர உடற்பயிற்சி செய்ததன் மூலமாக, இதுவரை 14 கிலோ வரை எனது உடல் எடையை குறைத்துள்ளேன்.
தற்போது என்மீது பரப்பப்படும் தேவையில்லாத அவதூறுகளை பொருட்படுத்துவது இல்லை’ என்று சொல்லி, வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்தார்.
