Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img

பாலியல் அழைப்பு பதிவுகளால் அனங்ஷா கதறல்: ஒரு இரவுக்கு எவ்வளவு பணம் வாங்குகிறீர்கள்?

மும்பை: திரைப்படத்தில் நடித்த கதாபாத்திரத்தை நிஜம் என்று தவறாக நினைத்து, ஒரு இரவுக்கு எவ்வளவு பணம் வேண்டும் என்று கேட்டு பலர் ஆபாச குறுஞ்செய்திகள் அனுப்புவதாக, இந்தி ‘மிர்சாபூர்’ வெப்தொடரில் நடித்திருந்த அனங்ஷா பிஸ்வாஸ் வேதனை தெரிவித்துள்ளார். ஓடிடி தளத்தில் வெளியான ‘மிர்சாபூர்’ என்ற தொடரின் முந்தைய பாகங்களில் ஜரீனா என்ற கேரக்டரில் நடித்திருந்த அனங்ஷா பிஸ்வாஸ் கண்கலங்க அளித்துள்ள பேட்டி வருமாறு: திரையில் நான் ஏற்று நடித்த கதாபாத்திரத்தை நிஜ வாழ்க்கை என்று தவறாக சித்தரித்து பலர் எனக்கு ஆபாச தொல்லை கொடுத்து வருகின்றனர்.

திரையில் நான் செய்த கதாபாத்திரத்தை (தனது சுயதேவைக்காக பிறருடன் பாலியல் உறவு வைக்கும் கேரக்டர்) பார்த்துவிட்டு, நிஜத்திலும் நான் அப்படித்தான் இருப்பேன் என்று பலர் தவறாக நினைக்கின்றனர். இதனால், எனது சமூக வலைத்தளங்களிலும், மின்னஞ்சலிலும், ‘ஒரு இரவுக்கு எவ்வளவு பணம் வாங்குகிறீர்கள்? எங்களோடு இரண்டு நாட்கள் வெளிநாட்டுக்கு வர முடியுமா?’ என்று கேட்டு அருவெறுப்பான செய்திகளை அனுப்பி, எனது இன்பாக்ஸை நிரப்பி வைத்திருக்கின்றனர். மக்களின் இந்த வக்கிரமான மனநிலை மாற வேண்டும் என்பதற்காகவே இதை நான் வெளிப்படையாக பேசுகிறேன்.

ரவீந்திரநாத் தாகூர், சத்யஜித் ரே பிறந்த மேற்கு வங்காள மண்ணை சேர்ந்த நன்கு படித்த பெண்ணான நான், மது அருந்துவது மற்றும் பார்ட்டிக்கு செல்வது போன்ற எந்த பழக்கத்தையும் வைத்துக்கொள்ள விரும்ப மாட்டேன். கருத்தாழம் கொண்ட புத்தகங்களை படிப்பதை விரும்பும் என்னை பற்றி இப்படி பேசுவது சாபமாகவும், அதேவேளையில் எனது நடிப்புக்கு கிடைத்த மிகப்பெரிய வெற்றியாகவும் நினைக்கிறேன்.