Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img

அமெரிக்க காதலனுடன் திடீரென்று உறவை முறித்துக்கொண்ட அனன்யா பாண்டே

மும்பை: இந்திய திரையுலகின் முன்னணி நடிகை அனன்யா பாண்டே (26), கடந்த 2024ல் நடந்த தொழிலதிபர் முகேஷ் அம்பானியின் மகன் ஆனந்த் அம்பானி, ராதிகா மெர்ச்சன்ட் திருமண கொண்டாட்ட நிகழ்ச்சியில், அமெரிக்காவை சேர்ந்த வாக்கர் பிளான்கோவை சந்தித்தார். அப்போது இருவருக்கும் இடையே மலர்ந்த நட்பு நாளடைவில் காதலாக மாறியது. தொடர்ந்து இருவரும் ஜோடியாக பல்வேறு பொது நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டனர்.

மேலும், ‘ஏடபிள்யூ’ என்ற இருவரது பெயரின் முதலெழுத்துகள் பொறிக்கப்பட்ட டாலர் அணிந்தும், சமூக வலைத்தள பக்கங்களில் பிறந்தநாள் வாழ்த்துகள் பகிர்ந்தும் தங்களது காதலை சூசகமாக வெளிப்படுத்தி வந்தனர். எனினும், தங்களின் உறவு குறித்து இருவரும் வெளிப்படையாக பேசாமல் ரகசியமாக காதலை வளர்த்து வந்தனர். கடந்த 2 வருடங்களாக தீவிரமாக காதலித்து வந்த அனன்யா பாண்டே, வாக்கர் பிளான்கோ ஜோடி, திடீரென்று தங்களது உறவை முறித்துக்கொண்டு பிரிந்துவிட்டதாக பாலிவுட்டில் பரபரப்பு தகவல் வெளியாகியுள்ளது.

பிரிவதற்கான முடிவை அனன்யா பாண்டே முன்னெடுத்ததாகவும், பிறகு இருவரும் பேசி பரஸ்பர சம்மதத்துடன் சுமூகமாக பிரிந்துவிட்டதாகவும் கூறப்படுகிறது. இருவருக்கும் இடையே எந்தவிதமான கசப்புணர்வும் இல்லாமல் இந்த பிரிவு நிகழ்ந்துள்ளதாக கூறப்படும் நிலையில், காதல் முறிவு குறித்த செய்திக்கு அனன்யா பாண்டே, வாக்கர் பிளான்கோ தரப்பில் இதுவரை எந்த நேரடி விளக்கமும் அளிக்கப்படவில்லை.