Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img

நள்ளிரவில் நடந்த அராஜகம் நடிகைக்கு மர்ம நபர் பாலியல் தொல்லை

பெங்களூரு: கன்னட டி.வி நிகழ்ச்சியில் பங்கேற்று ரசிகர்கள் மத்தியில் நன்கு பரிச்சயமான நடிகை திவ்யா சுரேஷ் (30), கடந்த ஞாயிறு இரவு 11.30 மணியளவில் தனது உறவினர்களுடன் காரை நோக்கி சாலையில் சென்று கொண்டிருந்தார். அப்போது மர்ம நபர் ஒருவர் அவரை பின்தொடர்ந்து வந்து, பாலியல் ரீதியாக அநாகரீகமான செயல்களில் ஈடுபட்டார். அதை பார்த்து அதிர்ச்சி அடைந்த திவ்யா சுரேஷ், அந்த நபரை கண்டித்தும் கூட, அவர் தனது செயலை நிறுத்தவில்லை.

தான் கார் ஏறும்வரை அந்த நபர் பின்தொடர்ந்து வந்ததாக திவ்யா சுரேஷ் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வீடியோ ஆதாரம் ஒன்றை வெளியிட்டுள்ளார். இச்சம்பவம் குறித்து திவ்யா சுரேஷ் கூறுகையில், ‘நாங்கள் காரை நோக்கி சென்றபோது, அந்த நபர் எங்களை பின்தொடர்ந்து வந்து அநாகரீகமாக நடந்துகொண்டார். நாங்கள் அவரை எச்சரித்த பிறகும் கூட அவர் தனது செயலை நிறுத்தவில்லை.

பெண்கள் பாதுகாப்பாக நடமாட முடியாத சூழ்நிலை காணப்படுகிறது. இதுபோன்ற சூழ்நிலையில் பெண்களுக்கு என்ன பாதுகாப்பு இருக்கிறது?’ என்று கேள்வி எழுப்பினார். நடிகையின் இப்பதிவை தொடர்ந்து, பெங்களூருவில் பெண்கள் பாதுகாப்பு குறித்த விவாதங்கள் மீண்டும் சூடுபிடித்துள்ளன. இந்த விவகாரத்தில் பெங்களூரு போலீசார் இதுவரை எந்த அதிகாரப்பூர்வ விளக்கமும் அளிக்கவில்லை.