Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img

ஆண்ட்ரியா, மிஷ்கின் திடீர் மோதல்

பாடகியாக இருந்து நடிகையாக அறிமுகமானவர், ஆண்ட்ரியா. ‘மாஸ்க்’ என்ற படத்தில் ரசிகர்களை கவர்ந்த அவர், மிஷ்கின் இயக்கத்தில் ‘பிசாசு 2’ என்ற படத்தில் நடித்து முடித்துள்ளார். இதில் அவர் பல காட்சிகளில் துணிச்சலாக நடித்திருப்பதாக தகவல் வெளியானது. ஆனால், ஆண்ட்ரியா அளித்த பேட்டியில், ‘என்னிடம் ‘பிசாசு 2’ படத்தின் கதையை சொல்லும்போது, துணிச்சலான காட்சிகள் இருப்பதாக இயக்குனர் மிஷ்கின் தெரிவித்தார். படப்பிடிப்பின் போது அவற்றை நீக்கிவிட்டார். இதில் ரொமான்டிக் காட்சிகள் அதிகமாக இருந்தது. மிஷ்கின் மீதான நம்பிக்கையில் நான் நடித்தேன்.

ரொமான்டிக் மற்றும் நெருக்கமான காட்சிகள் இருக்கும். ஆனால், நிர்வாண காட்சி இருக்காது’ என்றார். முன்னதாக இயக்குனர் மிஷ்கின் அளித்த பேட்டியில், ‘ஆண்ட்ரியாவை வைத்து நிர்வாண காட்சியை படமாக்கினேன். பிறகு அதை நீக்கிவிட்டேன்’ என்று சொல்லியிருந்தார். இப்படி ஆண்ட்ரியாவும், மிஷ்கினும் வெவ்வேறு கருத்துகளை தெரிவித்திருப்பது ரசிகர்களை குழப்பமடைய செய்துள்ளது. இதனால்தான் படம் வெளியிட தாமதம் ஏற்பட்டுள்ளது என்று கூறப்படுகிறது.