தினகரன் முதல்பக்கம்செய்திகள்படங்கள்விமர்சனம்ஓடிடி விமர்சனம்

ஆங்கிலோ இந்திய பெண் வேடத்தில் யோகி பாபு

சென்னை: ‘மெஹந்தி சர்க்கஸ்’ என்ற படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமானவரும், சமையல் கலை வல்லுநருமான மாதம்பட்டி ரங்கராஜ் ஹீரோவாக நடித்துள்ள படம், ‘மிஸ் மேகி’. ஹீரோயிகா ஆத்மிகா நடித்துள்ளார். ஆங்கிலோ இந்தியன் பெண் வேடம் உள்பட பல்வேறு தோற்றங்களில் யோகி பாபு நடித்துள்ளார். லதா ஆர்.மணியரசு இயக்கியுள்ளார். இப்படத்தின் படப்பிடிப்பு கடந்த வருடம் முடிவடைந்த நிலையில், தற்போது இப்படத்தின் டீசர் வெளியிடப்பட்டுள்ளது. வழக்கறிஞராக அறிமுகமாகும் யோகி பாபு, கோர்ட்டில் சரியாக வாதாட முடியாமல் தவிக்கிறார். அவருக்கு நிறைய கடன் இருக்கிறது என்று சொல்லப்படுகிறது. இதற்கு மறுபுறம் மாதம்பட்டி ரங்கராஜ், ஆத்மிகா ஜோடியின் காதல் கதை நகர்கிறது. இருவருடைய திருமணத்துக்கும் பெற்றோர் ஒத்துழைக்க மறுக்கின்றனர். இதற்கிடையே ஆங்கிலோ இந்தியன் கெட்டப்பில், மூதாட்டி வேடத்தில் யோகி பாபு வருகிறார். ஆக்‌ஷன் காட்சியும், அவரது கெட்டப்பும் கவனத்தை ஈர்க்கிறது. இப்படத்தின் ரிலீஸ் தேதி முடிவாகவில்லை.