Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img

அனிஷ்மா நடிக்கும் மொத ராத்திரி

சென்னை: ‘புஷ்பா’ படத்தின் 2 பாகங்கள், ‘குட் பேட் அக்லி’ ஆகிய படங்களை தயாரித்துள்ள மைத்ரி மூவி மேக்கர்ஸ், தமிழில் தயாரிக்கும் 3வது படம், ‘மொத ராத்திரி’. இதன் பர்ஸ்ட் லுக் மற்றும் டைட்டில் போஸ்டரை இயக்குனரும், நடிகருமான லோகேஷ் கனகராஜ் வெளியிட்டார். ராஜா கருப்பசாமி எழுதி இயக்குகிறார்.

ரிஷிகாந்த், ‘சிறை’ மற்றும் ‘யூத்’ அனிஷ்மா அனில்குமார், சேத்தன், ஏ.வெங்கடேஷ், பக்ஸ், அப்துல் லீ, ஷெல்லி கிஷோர், சங்கீதா பாலன், பானுப்பிரியா, எல்.சுமித்ரா தேவி, வர்ஷினி கார்மேகம், கார்த்திகேயன், வேலன், கவுசிக் கபிலன் நடிக்கின்றனர்.

வழக்கத்துக்கு மாறாக நடக்கும் ஒரு திருமணம், இரண்டு அறிமுகமில்லாத நபர்கள், பல்வேறு ஆச்சரியங்கள், இடைவிடாத பொய்கள் என்று, ஒரு இரவு எல்லாவற்றையும் எப்படி மாற்றுகிறது என்பது கதை. சுரேந்திரன் பரஞ்சோதி ஒளிப்பதிவு செய்ய, பரத் சங்கர் இசை அமைக்கிறார். அசோக் அர்ஜூனன் எடிட்டிங் செய்ய, ஏ.பாலு மகேந்திரா அரங்கம் அமைக்கிறார்.