Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img

‘மொத ராத்திரி’ கதையில் அனிஷ்மா

மைத்ரி மூவி மேக்கர்ஸ் சார்பில் நவீன் யெர்னேனி தயாரிக்கும் படம், ‘மொத ராத்திரி’. ராஜா கருப்பசாமி எழுதி இயக்குகிறார். ரிஷிகாந்த், அனிஷ்மா அனில்குமார், சேத்தன், ஏ.வெங்கடேஷ், பக்ஸ், அப்துல் லீ, ஷெல்லி கிஷோர், சங்கீதா பாலன், பானுப்பிரியா, சுமித்ரா தேவி.எல், வர்ஷினி கார்மேகம், கார்த்திகேயன், வேலன், கவுசிக் கபிலன் நடிக்கின்றனர். ‘சிறை’, ‘யூத்’ ஆகிய படங்களில் நடித்தவர், மலையாள நடிகை அனிஷ்மா அனில்குமார். ‘மண்டேலா’, ‘மாவீரன்’ ஆகிய படங்களை தொடர்ந்து பரத் சங்கர் இசை அமைக்கிறார்.

சுரேந்திரன் பரஞ்சோதி ஒளிப்பதிவு செய்ய, ஏ.பாலு மகேந்திரா அரங்கம் அமைக்கிறார். அசோக் அர்ஜூனன் எடிட்டிங் செய்கிறார். வழக்கத்துக்கு மாறான ஒரு திருமணம், ஒரு இரவு, இரண்டு அறிமுகமில்லாத நபர்கள், அதில் பல்வேறு ஆச்சரியங்கள், பல்வேறு பொய்கள் என்று, ஒரு இரவு எல்லாவற்றையும் எப்படி மாற்றுகிறது என்பது கதை.