சென்னை: லட்சுமி அம்மாள் பிலிம்ஸ் பட நிறுவனம் சார்பாக ‘விருத்தாச்சலம்’ படத்தை தயாரித்த செந்தில் முருகன், தனது இரண்டாவது படமாக தயாரித்துள்ள படம் ‘சிட்டா’. இந்தப் படத்தில் சிபி கதையின் நாயகனாக அறிமுகமாகிறார். கிராம நிர்வாக அலுவலர் கதாபாத்திரத்தில் ‘பன் பட்டர் ஜாம்’ படத்தில் நடித்த ஆதியா பிரசாத் நடித்துள்ளார். நாயகன் சிபிக்கு ஜோடியாக வெகுளி பெண்ணாக மலையாளத்தில் ‘வாழ 2’ படத்தில் நடித்த ஆராத்யா சாய் தமிழில் அறிமுகமாகிறார். மற்றும் கிராமத்து தலையாரியாக நடிக்கிறார் பாலசரவணன், இயக்குநர் மூர்த்தி அரசியல்வாதியாகவும், அவரது மனைவியாக மதுமிதாவும் அருவி மதன், செந்தில் முருகன், சதீஷ் ஆகியோர் நடித்துள்ளனர். விரைவில் படம் திரைக்கு வருகிறது.
+
