Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img

அர்ஜுன் தாஸுடன் இணைந்த ஐஸ்வர்யா லட்சுமி: ஓடிடியில் வெளியாகும் 'லவ்' திரைப்படம்!

தமிழ் மற்றும் மலையாளத் திரையுலகில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் ஐஸ்வர்யா லட்சுமி. இவர் நடிப்பில் வெளியான 'கட்டா குஸ்தி' உள்ளிட்ட படங்கள் வசூல் ரீதியாகவும், அண்மையில் மலையாளத்தில் வெளியான 'ஆஷா' திரைப்படம் விமர்சன ரீதியாகவும் பெரும் வரவேற்பைப் பெற்றன.

இந்த வரிசையில், ஐஸ்வர்யா லட்சுமி மற்றும் அர்ஜுன் தாஸ் இணைந்து நடித்துள்ள புதிய திரைப்படமான 'லவ்', நேரடியாக நெட்பிளிக்ஸ் (Netflix) ஓடிடி தளத்தில் வரும் அக்டோபர் 2 ஆம் தேதி வெளியாகவுள்ளது.

இப்படம் குறித்து நடிகை ஐஸ்வர்யா லட்சுமி சமீபத்தில் தனது அனுபவங்களைப் பகிர்ந்து கொண்டார். அப்போது அவர் கூறுகையில், "அர்ஜுன் தாஸும் நானும் முன்பொருமுறை இணைந்து நடிக்க வேண்டியிருந்தது, ஆனால் தவிர்க்க முடியாத காரணங்களால் அது தள்ளிப்போனது. இதனால் நான் மிகவும் வருத்தப்பட்டேன். இருப்பினும், தற்போது 'லவ்' படத்தின் மூலம் அந்த நீண்ட நாள் ஆசை நிறைவேறியுள்ளது.

மேலும், நீண்ட நாட்களாகவே ஒரு காதல் கதைக் களத்தில் நடிக்க வேண்டும் என்ற ஆசை எனக்கு இருந்தது. இப்படத்தில் நான் ஏற்றுள்ள 'தாரா' கதாபாத்திரம் எனது சொந்த வாழ்க்கையுடன் 80 சதவீதம் ஒத்துப்போகிறது.

இதனால் இந்தக் கதாபாத்திரத்தில் நடிப்பது எனக்கு மிகவும் இயல்பாகவே வந்தது. வாழ்க்கையில் நல்ல விஷயங்கள் நடக்க சற்று காலம் தேவைப்படுகிறது; அந்த வகையில் இந்த 'லவ்' திரைப்படம் உங்கள் அனைவரையும் கவரும் வகையில் இருக்கும்" என்று உற்சாகத்துடன் தெரிவித்தார்.