சென்னை: காவல்துறை அதிகாரியாக அர்ஜூன் தாஸ் நடித்துள்ள சைக்கலாஜிக்கல் கிரைம் திரில்லர் படம், ‘ஜான் டோ’. இது வரும் 13ம் தேதி வெளியாகிறது. முக்கியமான வேடங்களில் சஞ்சனா நடராஜன், சிருஷ்டி, ஜாரா வினீத் சந்தோக், நீரவ் நடித்துள்ளனர். மதுமிதா, நிக்கோலஸ் செவாலியர் கதை, திரைக்கதை எழுதியுள்ளனர்.
அர்கா மீடியா ஒர்க்ஸ் சார்பில் ஷோபு யார்லகட்ட, பிரசாத் தேவினேனி இணைந்து தயாரித்துள்ளனர். மதுமிதா இயக்க, பிரீதா ஜெயராமன் ஒளிப்பதிவு செய்துள்ளார். முஜீப் மஜீத் இசை அமைக்க, ஆர்டிஸ்ட் 404 குழு கூடுதல் இசைப் பணிகளை மேற்கொண்டுள்ளது. ஜான் டோ என்பவர் யார்? பாதிக்கப்பட்டவரா, கொலைகாரனா, காணாமல் போன குழந்தையா என்பதை மையப்படுத்தி கதை நகர்கிறது.
