தினகரன் முதல்பக்கம்செய்திகள்படங்கள்விமர்சனம்ஓடிடி விமர்சனம்

இட்லி கடை படத்தில் ஹீரோ ஆனார் அருண் விஜய்

சென்னை: தமிழில் வெளியான ‘ப.பாண்டி’, ‘ராயன்’ ஆகிய படங்களை இயக்கி நடித்த தனுஷ், அடுத்து ’நிலவுக்கு என்மேல் என்னடி கோபம்’ என்ற படத்தை இயக்கி முடித்துள்ளார். தற்போது ‘இட்லி கடை’ என்ற படத்தை அவர் இயக்கி வருகிறார். இதில் நித்யா மேனன், ஷாலினி பாண்டே நடிக்கின்றனர். ஜி.வி.பிரகாஷ் குமார் இசை அமைக்கிறார். கிரண் கவுசிக் ஒளிப்பதிவு செய்கிறார்.

தனுஷ், ஆகாஷ் பாஸ்கரன் இணைந்து தயாரிக்கின்றனர். இப்படத்தின் ஹீரோ யார் என்பது அறிவிக்கப்படாமல் இருந்த நிலையில், தற்போது அருண் விஜய் ஹீரோவாக நடிக்கிறார் என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. கவுரவ வேடத்தில் தனுஷ் நடிக்கிறார். தேனி, பொள்ளாச்சி ஆகிய பகுதிகளில் படப்பிடிப்பு நடந்துள்ளது.