Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img

ஆச்சரியப்பட வைக்கும் அசின் மகள்

மைக்ரோமேக்ஸ் கம்பெனியின் இணை நிறுவனர் ராகுல் சர்மா, தனது மனைவி அசின் குறித்து பேசியது வைரலாகியுள்ளது. அவர் கூறுகையில், ‘குடும்ப வாழ்க்கை மற்றும் குழந்தை வளர்ப்பில் அசின் மிகவும் திறமையானவர். என் வாழ்க்கைக்கு அவர் மிகப்பெரிய பலமாக இருக்கிறார். என்னை நன்கு புரிந்துகொண்டு, கடினமான நேரங்களில் என்னை உற்சாகப்படுத்துகிறார். அசினுக்கு தமிழ், மலையாளம், இந்தி, ஆங்கிலம் உள்பட 7 மொழிகள் தெரியும். எங்கள் மகள் அரினுக்கு கொரியா, ஜப்பான், சீனா என்று, 12 மொழிகளில் பேச தெரியும்.

வீட்டில் நானும், அசினும் இந்தியிலும், ஆங்கிலத்திலும் பேசுவோம். வீட்டில் டி.வி கிடையாது. அரினுக்கு செல்போன் கொடுக்க மாட்டோம். படிப்பதற்கு நிறைய புத்தகங்கள் இருக்கிறது. அரின் 2ம் வகுப்பு படித்தாலும், 8 மற்றும் 9ம் வகுப்பு புத்தகங்களும் இருக்கிறது. அரின் வளர்ச்சிக்கு அசின்தான் காரணம்’ என்றார்.