சென்னை, அக்.29: நடிகை அசின், கடந்த 2016ம் ஆண்டு மைக்ரோமேக்ஸ் நிறுவனர் ராகுல் சர்மாவை திருமணம் செய்துகொண்டார். இந்த தம்பதிக்கு 2017-ஆம் ஆண்டு பெண் குழந்தை பிறந்தது. தங்கள் குழந்தைக்கு அரின் என பெயர் சூட்டினார்கள். சமீபத்தில் தனது மகளின் 9-வது பிறந்தநாளை ஜப்பானில் கொண்டாடியுள்ளார் அசின். அங்கு கேக் வெட்டி பிறந்தநாளை கொண்டாடும் புகைப்படங்கள் தற்போது சமூக வலைத்தளங்களில் வெளியாகி வைரலாகியுள்ளன.
அசினின் கணவர் ராகுல் தனது மகள் குறித்து பேசுகையில், ‘‘இதுவரை எங்கள் மகளுக்கு டிவி மற்றும் போனை நாங்கள் அறிமுகம் செய்யவில்லை. எங்கள் வீட்டில் புத்தகங்கள் மட்டுமே உள்ளன. அரினின் பள்ளியில் இருப்பதை விட எங்கள் வீட்டில் அதிக புத்தகங்கள் உள்ளன. அரின் தற்போது 2-ஆம் வகுப்பு படித்து வருகிறார். ஆனால், எங்களிடம் 8-ஆம் வகுப்பு மற்றும் 9-ஆம் வகுப்பிற்கான புத்தகங்கள் வீட்டில் உள்ளன. ‘அவள் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வையும் எழுதிவிடட்டுமே, என்ன வித்தியாசம் வரப்போகிறது?’ என்று நான் அவ்வப்போது வேடிக்கையாக சொல்வதுண்டு. இதற்கெல்லாம் காரணம் அசின் தான்’’ என கூறினார்.
மேலும், பேசிய ராகுல் தனது மகளுக்கு மொழிகளின் மீதுள்ள ஆர்வத்தையும், அவளுக்கு 12 மொழிகளை புரிந்துகொண்டு பேசவும் தெரியும் என்றும், இதில் கொரியன், ஜப்பனீஸ், தாய் (Thai) மற்றும் சைனீஸ் ஆகிய மொழிகளும் அடங்கும் என்றும் அவர் கூறியுள்ளார்.
