Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img

தடகள போட்டிக்காக இணைந்த சூரி, விஜய் ஆண்டனி

சென்னை: சென்னை மாவட்ட மாஸ்டர்ஸ் தடகள சங்கம் நடத்தும் ஆண், பெண் 30 வயதுக்கு மேல் உள்ளவர்களுக்கான ‘சென்னை மாவட்ட மாஸ்டர்ஸ் அதலெடிக் சாம்பியன்ஷிப் 2026’ தடகள போட்டி சென்னை நேரு விளையாட்டு அரங்கத்தில் நேற்று துவங்கியது.

இப்போட்டியை சென்னை மாவட்ட மாஸ்டர்ஸ் தடகள சங்கத்தின் தலைவர் ரெட் ஜெயன்ட் மூவிஸ் எம்.செண்பகமூர்த்தி, செயலாளர் கே.சுரேஷ், பொருளாளர் சசிகலா மற்ற கமிட்டி உறுப்பினர்கள் முன்னிலையில் நடைபெற்றது. சிறப்பு விருந்தினர்கள் நடிகர் சூரி, நடிகர் விஜய் ஆண்டனி, ஏ.மயில்வாகனன் ஐபிஎஸ், சூர்ய பிரகாஷ் எம்.பி, எஸ்.என்.ஜெயமுருகன் உள்ளிட்டோர் கலந்து கொண்டு போட்டியில் வென்றவர்களூக்கு பரிசுகள் வழங்கி விழாவை சிறப்பித்தனர். இன்று நடைபெறும் இந்த போட்டியில் மேலும் பல தடகள் வீரர்கள் கலந்து கொள்கின்றனர்.