Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img

7 முறை தற்கொலைக்கு முயன்றேன்: செல்வராகவன் பகீர்

சென்னை: இயக்குனர் செல்வராகவன் அவ்வப்போது தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தத்துவ கருத்துக்களை தெரிவித்து வருகிறார். சமீபத்தில் அவர் வெளியிட்ட வீடியோவில், ஏழு முறை தற்கொலை முயற்சி செய்ததாக கூறியிருப்பது சினிமா ரசிகர்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த வீடியோவில் அவர் மேலும் கூறியதாவது: உலகம் முழுவதும் பார்த்தாலும் வாழ்க்கையில் இந்த இரண்டையும் அனுபவிக்காதவர்கள் இருக்க முடியாது.

ஒன்று தற்கொலை முயற்சி, இன்னொன்று டிப்ரஷன். நான் ஏழு முறை தற்கொலைக்கு முயற்சி செய்துள்ளேன், ஆனால் இப்பொழுது அல்ல, சில வருடங்களுக்கு முன்பு. ஒவ்வொரு முறையும், தற்கொலைக்கு முயலும் போது, உள்ளே ஒரு குரல் கேட்கும். ‘ஏதோ சொல்ற மாதிரி, ஏதோ கேக்குற மாதிரி இருப்பதை உணர்வேன். கடவுள் ஏதோ சொல்கிறார் என நினைத்து விட்டுவிடுவேன். அதன் பிறகு, 10 நாள் கழித்து, அல்லது ஆறு மாதம், ஒரு வருடம் கழித்து கூட வாழ்க்கை திடீரென மகிழ்ச்சியாகவும் அமைதியாகவும் மாறும். அப்போது, தற்கொலை செய்து கொண்டிருந்தால் எல்லாமே போயிருக்குமே என்று நான் நினைப்பேன்.