கதையின் நாயகனாக சூரி, அவரது ஜோடியாக மஹிமா நம்பியார் நடித்துள்ள படம், ‘மண்டாடி’. முக்கிய வேடங்களில் சுஹாஸ், சத்யராஜ், ரவீந்திரா விஜய், அச்யுத் குமார், பாலசரவணன், மிதுன், கீர்த்திகா நடித்துள்ளனர். ஆர்.எஸ் இன்ஃபோடெயின்மெண்ட் சார்பில் எல்ரெட் குமார் தயாரித்துள்ளார். மதிமாறன் புகழேந்தி எழுதி இயக்கியுள்ளார். ஜி.வி.பிரகாஷ் குமார் இசை அமைத்துள்ளார். கடலின் நடுவே நடக்கும் பரபரப்பான படகு பந்தயம், போட்டியாளர்களின் கட்டுக்கடங்காத ஆர்வம், வெற்றிக்கான போராட்டம் என்று, ஒரு முழுமையான ஸ்போர்ட்ஸ் ஆக்ஷன் டிராமாவாக படம் உருவாகியுள்ளது.
கடினமான கடலோர பகுதிகளில் படமாக்கப்பட்டுள்ள இப்படத்தின் முதல் பாடலான ‘மண்டாடி மண்டாடி’ வெளியாகி நல்ல வரவேற்பை பெற்ற நிலையில், தற்போது ‘உசுரே நீதான் புள்ள’ என்ற காதல் பாடல் வெளியாகியுள்ளது. இதில் சூரி, மஹிமா நம்பியார் நடித்துள்ளனர். ஜெயஸ்ரீ மதிமாறன் எழுதிய பாடலை கபில் கபிலன், சஞ்சனா இணைந்து பாடியுள்ளனர். வரும் செப்டம்பர் 10ம் தேதி தமிழ் மற்றும் தெலுங்கில் படம் திரைக்கு வருகிறது.
