சென்னை: இயக்குனர் கே.பாலச்சந்தர் 96வது பிறந்தநாளை முன்னிட்டு, அவரது படங்களின் பாடல்களை, ‘KB - 96’ என்ற பெயரில் இசை நிகழ்ச்சியை, கே.பாலச்சந்தர் ரசிகர்கள் சங்கத்தின் சார்பில், சென்னையில் நடைபெற்றது. இந்நிகழ்சியை சங்கத்தின் தலைவர் நாகா, பொதுச்செயலாளர் கவிதாலயா வீ.பாபுவின் மேற்பார்வையில், நிர்வாகிகள் ஏற்பாடு செய்திருந்தார்கள்.
முரளியின் மெளனராகம் இசைக்குழுவினர், இசை நிகழ்ச்சியை நடத்தினர். நடிகர் சங்க தலைவர் நாசர், நடிகர்கள் ஒய்.ஜி.மகேந்திரன், சின்னி ஜெயந்த், ராம்ஜி, ஜெயந்த், நடிகைகள் சச்சு, அம்பிகா, சுஹாசினி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
