Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img

குளிக்கும் வீடியோவை வெளியிட்ட ஃபரீனா

சென்னை: குளிக்கும் வீடியோவை தமிழ் நடிகை ஃபரீனா வெளியிட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. டிவி தொடர்களில் நடிக்கும் ஃபரீனா, சோஷியல் மீடியாவில் ஆக்டிவ்வாக இருக்கிறார். கவர்ச்சி காட்டாமல், ஹோம்லி லுக்கில் மட்டுமே நடிக்கும் இவர், தனது இன்ஸ்டாகிராம் பக்கத்திலும் பெரும்பாலும் ஹோம்லியாகவே புகைப்படங்களை வெளியிட்டு வந்தார். இந்நிலையில் திடீரென டவல் மட்டும் கட்டிக்கொண்டு, குளியல் அறையில் தான் குளிக்கும் வீடியோவை அவர் தனது இன்ஸ்டாகிராமில் பதிவிட்டார். இதைப் பார்த்து நெட்டிசன்கள் அதிர்ச்சியடைந்தனர்.

ஃபரீனாவா இப்படி என அவர்கள் கேள்வி எழுப்ப ஆரம்பித்துவிட்டனர். ரசிகர்கள் பலர், அவரது இந்த நடவடிக்கையை கடுமையாக கண்டித்து கமென்ட்கள் போட, பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இந்த வீடியோவால் வைரல் ஆகலாம் என நினைத்த ஃபரீனா, நாலாபுறத்திலும் இருந்து வந்த எதிர்ப்புகளால் திகைத்துப்போய் உள்ளார். ஃபரீனாவுக்கு சினிமா ஆசை வந்துவிட்டது. பட வாய்ப்புக்காகவே இதுபோல் கவர்ச்சி வீடியோவை அவர் வெளியிட்டு இருக்கிறார் என்றும் பலரும் கருத்து தெரிவித்து வருகிறார்கள்.