Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img

காதல் மனைவியை விவாகரத்து செய்கிறார் சர்வானந்த்

ஐதராபாத்: தமிழில் திரைக்கு வந்த ‘நாளை நமதே’, ‘எங்கேயும் எப்போதும்’, ‘ஜேகே எனும் நண்பனின் வாழ்க்கை’, ‘கணம்’, ‘பைக்கர்’ ஆகிய படங்களில் நடித்தவர், தெலுங்கு நடிகர் சர்வானந்த். கடந்த 2023ல் தனது காதலி ரக்‌ஷிதா ரெட்டியை இருவீட்டு பெற்றோர் சம்மதத்துடன் திருமணம் செய்தார். பிறகு 2024ல் ஒரு பெண் குழந்தைக்கு தந்தையானார். இந்நிலையில், கடந்த சில மாதங்களாக சர்வானந்த், ரக்‌ஷிதா ரெட்டிக்கு இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு பிரிந்து வாழ்ந்து வருவதாக தகவல் வெளியானது. இதை உறுதி செய்யும் விதமாக, தனது சமூக வலைத்தளத்தில் இருந்த அனைத்து திருமண போட்டோக்களையும் சர்வானந்த் நீக்கியுள்ளார். ஆனால், சர்வானந்த் இன்னும் ரக்‌ஷிதா ரெட்டியை சட்டப்படி விவாகரத்து செய்யவில்லை என்றும், அவர்களுக்குள் சில தனிப்பட்ட பிரச்னைகள் ஏற்பட்டுள்ளதால், ஒரு சிறிய இடைவெளி எடுத்துக்கொண்டு தனித்தனியாக வாழ்ந்து வருகிறார்கள் என்றும் கூறப்படுகிறது. இந்த விவகாரம் குறித்து சர்வானந்த் இதுவரை எந்த விளக்கமும் அளிக்கவில்லை.