Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img

பாக்யஸ்ரீயை நெகிழ வைத்த மோகன்லால்

தெலுங்கு மற்றும் தமிழில் நடித்துள்ள பாக்யஸ்ரீ போர்ஸ், ‘ஆபரேஷன் கங்கா’ என்ற படத்தில் நடிப்பதன் மூலம் மலையாள படவுலகில் அறிமுகமாகிறார். விஷ்ணு மோகன் இயக்கத்தில் ராணுவ பின்னணியில் உருவாகும் இப்படத்தில் மோகன்லால் ஹீரோவாக நடிக்க, பாலிவுட் நடிகர் அர்ஜூன் ராம்பால் முக்கிய ேகரக்டரில் நடிக்கிறார். சமீபத்தில் ஜார்ஜியா நாட்டில் படப்பிடிப்பு நடந்தது. மோகன்லாலுடன் இணைந்து பணியாற்றியபோது எடுத்த ேபாட்டோவை வெளியிட்டுள்ள பாக்யஸ்ரீ போர்ஸ், அந்த அனுபவம் குறித்து பதிவிட்டுள்ளார்.

அவர் கூறுகையில், ‘அன்பான லால் சார், உங்கள் படத்தில் நானும் ஒரு இணை நடிகையாக இருப்பது, எனக்கு கிடைத்த ஒரு வரம் என்றே தோன்றுகிறது. படப்பிடிப்பின் ஒவ்வொரு நாளும் உங்கள் கண்களின் வழியாக நமது திரையுலகை பார்ப்பதற்கும், உங்களிடம் இருந்து கற்றுக்கொள்வதற்கும் நிறைய வாய்ப்பு கிடைத்தது. உண்மையிலேயே நீங்கள் ஒரு அற்புதமான கலைஞர் சார்’ என்று நெகிழ்ச்சியுடன் குறிப்பிட்டுள்ளார்.