Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img

அமல் அஜித், பிரியங்கா ராஜகுமாரன் நடிக்கும் ப்ளாக் நைட் பாய்ஸ்

சென்னை: அருள் முருகன் பிக்சர்ஸ், ட்ரீம் ரன்வே 26த் செஞ்சுரி ஆகிய நிறுவனங்கள் சார்பில், தயாரிப்பு மேற்பார்வையாளராக பணியாற்றி அனுபவம் பெற்ற க.இ.மணிகண்டன் என்ற விமல்.ஜி தயாரிக்கும் படம், ‘ப்ளாக் நைட் பாய்ஸ்’. டி.வி தொடர்களில் நடித்து, சோஷியல் மீடியா மூலம் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்த அமல் அஜித், தேவயானியின் மகள் பிரியங்கா ராஜகுமாரன் ஜோடியாக நடிக்கின்றனர்.

காதல், ஃபேமிலி சென்டிமெண்ட் கலந்த ஜனரஞ்சக படமான இதை செம்பர் வி.முருகேசன் இயக்குகிறார். மனோஜ் பரமஹம்சா ஒளிப்பதிவு செய்ய, டி.முத்துராஜ் தயாரிப்பு வடிவமைப்பாளராக பணியாற்றுகிறார். ஜோஷ்வா ஸ்ரீதர் இசை அமைக்க, இளங்கோ எடிட்டிங் செய்ய, எஸ்.கண்ணன் அரங்கம் அமைக்க, பி.சி ஸ்டண்ட்ஸ் குழு சண்டைப் பயிற்சி அளிக்கிறது. பாபா பாஸ்கர் நடனக் காட்சி அமைக்க, பா.விஜய் பாடல்கள் எழுதுகிறார். இப்படத்தின் பூஜை சென்னையில் நடந்தது.