Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img

*அமல் அஜித் – பிரியங்கா ராஜகுமாரன் நடிக்கும் ‘ப்ளாக் நைட் பாய்ஸ்!

அமல் அஜித் – பிரியங்கா ராஜகுமாரன் இணைந்து நடிக்கும் புதிய திரைப்படமான ‘ப்ளாக் நைட் பாய்ஸ்’ படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் தொடங்கியுள்ளது.

Arul Murugann Picture மற்றும் Dream Runway 26th Century நிறுவனங்கள் சார்பில் க.இ.மணிகண்டன் என்கிற விமல் G இணைந்து தயாரிக்கும் இப்படத்தில், அமல் அஜித் கதாநாயகனாகவும், நடிகை தேவயானி – இயக்குநர் ராஜகுமாரன் தம்பதியின் மகளான பிரியங்கா ராஜகுமாரன் கதாநாயகியாகவும் நடிக்கின்றனர்.

தொலைக்காட்சித் தொடர்களில் நடித்து வந்த அமல் அஜித், சமூக வலைதளங்களில் வெளியிட்ட வீடியோக்கள் மூலம் கவனம் பெற்றவர். தற்போது ‘ப்ளாக் நைட் பாய்ஸ்’ திரைப்படத்தின் மூலம் கதாநாயகனாகப் புதிய பயணத்தைத் தொடங்குகிறார். இன்றைய இளைஞர்களைக் கவரும் காதல் கதையுடன், குடும்பத்தினர் அனைவரும் இணைந்து ரசிக்கும் வகையிலான பொழுதுபோக்குத் திரைப்படமாக இப்படம் உருவாகிறது. தயாரிப்பு மேற்பார்வையில் அனுபவம் கொண்ட விமல் G, தனது அனுபவத்தையும் திட்டமிடல் திறனையும் பயன்படுத்தி இப்படத்தைத் தயாரித்து வருகிறார்.

இப்படத்தை செம்பர் V. முருகேசன் இயக்குகிறார். ஒளிப்பதிவை மனோஜ் பரமஹம்சா மேற்கொள்கிறார். கலை இயக்குநராக T. முத்துராஜ் பணியாற்றுகிறார். ஜோஷ்வா ஸ்ரீதர் இசையமைக்கிறார். படத்தொகுப்பை இளங்கோ கவனிக்கிறார். கலை இயக்கப் பணிகளில் கண்ணன் S, சண்டைப் பயிற்சியில் P.C. ஸ்டண்ட்ஸ், நடனத்தில் பாபா பாஸ்கர், பாடல் வரிகளில் பா. விஜய் ஆகியோர் இணைந்துள்ளனர். பூஜையுடன் படப்பிடிப்பைத் தொடங்கியுள்ள ‘ப்ளாக் நைட் பாய்ஸ்’ திரைப்படம் குறித்த அடுத்தடுத்த அறிவிப்புகள் விரைவில் வெளியாகும் எனப் படக்குழு தெரிவித்துள்ளது.