சென்னை: சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்ற ‘வதந்தி: சீசன் 2- தி மிஸ்ட்ரி ஆஃப் மணி’ என்ற வெப் தொடரில் சுந்தரேசன் என்ற கேரக்டரில் நடித்த அர்ஜுன் சக்கரவர்த்தி அவரது தனித்துவமான நடிப்பால் கவனம் பெற்றார்.
சமீபத்தில் அவர் அளித்த பேட்டியில் பேசியதாவது:
சிறு வயதில் இருந்தே டிவியில் எந்த படம் ஓடினாலும் அது தொடர்பான சம்பவங்களை தந்தை சொல்வார். அதை கேட்டு வளர்ந்ததால் திரைத்துறையில் பணியாற்ற வேண்டும் என்ற ஆசை எழுந்தது. தற்போது நான் சென்னை சட்டக் கல்லூரியில் பயின்று வருகிறேன். நடிப்பின் மீதான ஆர்வம் காரணமாக நிறைய கம்பெனிகளில் ஆடிசனுக்கு சென்றேன். அதன் பிறகு கூத்துப் பட்டறைக்கு சென்று நடிப்பு பயிற்சியை பயின்றேன். சினிமா சண்டை பயிற்சி இயக்குனர் டேஞ்சர் மணியிடம் சண்டை காட்சிகளுக்காக பயிற்சி பெற்றேன். ‘நீ கருப்பா இருக்கியே, உன் மூஞ்சி கேமராவுல தெரியுமா’ என்று பலர் என்னை கேலி செய்தனர். நடிகனாகும் தகுதியை வளர்த்து கொண்டேன். புஷ்கர், காயத்ரி, ஆண்ட்ரூ லூயிஸ் வைத்த ஆடிசனில் பாஸ் ஆகி ‘வதந்தி சீசன் 2’ தொடரில் நடிக்கும் வாய்ப்பை பெற்றேன். இதன் பிறகு எந்த வாய்ப்பு கிடைத்தாலும் அதில் என் 100 சதவீத உழைப்பை கொடுப்பேன். திரை துறையிலும், மக்கள் மனதிலும் எனக்கென்று ஒரு தனிப்பட்ட இடத்தை உருவாக்கி கொள்ள வேண்டும்.
