திடீர் உடல் மாற்றத்துக்கு தமன்னா மருந்து பயன்படுத்தினாரா: பரபரப்பு தகவல்
மும்பை: பல்வேறு மொழிகளில் நடித்து வரும் தமன்னா, திடீரென்று ஏற்பட்ட உடல் மாற்றம் காரணமாக, நெட்டிசன்களால் கடுமையாக விமர்சிக்கப்படுகிறார். அவர் விரைவில் எடையை குறைக்க Ozempic ஊசியை பயன்படுத்தியிருக்கிறார் என்று குற்றம் சாட்டப்பட்டுள்ளது. இதுகுறித்து எழுந்துள்ள சர்ச்சைகளுக்கு தமன்னா அளித்துள்ள விளக்கம் வருமாறு: கொரோனா தொற்று எனது உடலை பலமாக தாக்கியது.
இதனால், எனது 20 வயதுகளில் இருந்த அதே அளவு உடல் எடையை தக்கவைத்துக்கொள்வது கடினமாக இருந்தது. எனவே, கடுமையாக போராடினேன். அப்போதுதான் என் வயிறு வெளியே தெரிந்தது. அதை நான் உணர்ந்தபோது, என் உடலுக்குள் என்ன நடக்கிறது என்று தீவிரமாக யோசித்தேன். வீக்கம் என்பது நிஜம்.
மாதவிடாய் சுழற்சிக்கு உள்ளாகும் எந்த பெண்ணும் தன் உடல் மாறுவதை உணர்கிறாள். எனது 30களின் ஆரம்பத்தில் நானும் அதையே அனுபவித்தேன். நான் சிந்தி. இடுப்பு அழகு என்பது எலும்பு அமைப்பு. நான் உலகளாவிய அழகு குறிப்புகளை பின்பற்றுவதை யாரும் அறிந்திருக்க மாட்டீர்கள் என்று நினைக்கிறேன். மற்றபடி மருந்துகளை பயன்படுத்தவில்லை என்றார்.
