Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img

பாலிவுட் மீது பிரியங்கா குற்றச்சாட்டு

ஹாலிவுட்டில் அதிக கவனம் செலுத்தி வரும் பிரியங்கா சோப்ரா, நீண்ட இடைவெளிக்கு பிறகு ‘வாரணாசி’ என்ற படத்தின் மூலம் தென்னிந்திய படவுலகிற்கு வந்துள்ளார். எஸ்.எஸ்.ராஜமவுலி இயக்கும் இதில் மகேஷ் பாபுவுக்கு ஜோடியாக நடிக்கும் அவர், இந்தியாவிலேயே அதிக சம்பளம் வாங்கும் நடிகைகளில் ஒருவராக போற்றப்படுகிறார். அவரிடம், பாலிவுட்டை விட்டுவிட்டு ஹாலிவுட்டுக்கு சென்றது ஏன் என்று கேட்கப்பட்டது. அதற்கு பதிலளித்த பிரியங்கா சோப்ரா, `எப்போதுமே நான் பாலிவுட்டை விட்டு வெளி​யேற நினைத்​த​து இல்​லை. அங்கு பணியாற்றிய காலத்தில், பல்வேறு காரணங்​களுக்​காக நான் ஒதுக்​கப்​படு​வது போல் உணர்ந்​தேன். இதனால், எனது எல்​லையை விரிவுபடுத்த நினைத்தேன். ஒரு நடிகை​யாக எனக்கு உற்​சாக​மாக இருக்​கும் வாய்ப்​பு​களை தேடும் ஆர்வம் எனக்கு ஏற்பட்டது.

அமெரிக்காவுக்கு சென்று நடிக்​க ஆரம்பித்தேன்​. கிட்டத்தட்ட 12 ஆண்டுகளுக்கு பிறகு, அற்புதமான படைப்புகளை தேர்வு செய்து நடிப்பதற்கான உந்துதலை உணர்கிறேன். எனக்கு இந்திய படங்கள் மிகவும் பிடிக்கும். ‘வாரணாசி’ மூலம் மீண்டும் திரும்பி வந்ததில் மகிழ்ச்சி அடைகிறேன். ஹாலிவுட், பாலிவுட் என்று பிரித்து பார்க்க விரும்பவில்லை. இரண்டு உலகங்களை கடந்து செல்வது போல் உணர்கிறேன். இரு துறைகளிலும் பணியாற்றுவதை பெரிதும் ரசிக்கிறேன். கலாச்சாரங்களை போலவே இரண்டும் வெவ்வேறு வழிகளில் மாறுபட்டவை. இப்போது என்னால் அங்கும், இங்கும் பணியாற்ற முடியும். இது தனித்துவமான, ஒரு அற்புதமான விஷயம்’ என்றார்.