Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img

வலியுடன் காதலனை பிரிந்த லாஸ்லியா

இலங்கையில் செய்தி வாசிப்பாளராக இருந்து சென்னைக்கு வந்து நடிகையானவர், லாஸ்லியா. அவருக்கு நடிகர் கவினுடன் ஏற்பட்ட நட்பு, பின்னாளில் காதலாக மாறியது. இந்த ஜோடியை ரசிகர்கள், ‘கவிலியா’ என்று அழைத்தனர். ஆனால், சில மாதங்களில் இருவரும் பிரேக்அப் மூலம் பிரிந்துவிட்டனர். பிறகு மோனிகா டேவிட் என்பவரை கடந்த 2023ல் கவின் திருமணம் செய்துகொண்டார். தற்போது கவின், லாஸ்லியா இருவரும் அவரவர் பணியில் கவனம் செலுத்தி வருகின்றனர்.

திரைப்படங்கள், விளம்பர படங்கள், போட்டோ ஷூட் என்று லாஸ்லியா பிசியாக இருக்கிறார். சோஷியல் மீடியாவிலும் சுறுசுறுப்பாக இயங்கி வருகிறார். இந்நிலையில் லாஸ்லியா அளித்த பேட்டியில், ‘எனக்கும், எனது முன்னாள் காதலருக்கும் அடிக்கடி சண்டை வரும். அதனால், நாங்கள் பிரிய வேண்டிய நிலை ஏற்பட்டது. அந்த பிரிவு, ஒரு வருடம் கடந்தும் கூட எனக்கு அதிக வலியை கொடுத்தது. ஆனால், அன்றே நாங்கள் ஆரோக்கியமான எண்ணத்துடன் பிரிந்து சென்றது மிகவும் நல்லது என்று இன்று நினைக்கிறேன். எங்களுக்குள் இயற்கையாக காதல் மலர்ந்தது. ஆனால், பிறகு ஏனோ எங்களுக்கு சரிப்பட்டு வரவில்லை’ என்றார். அவர் காதலர் என்று குறிப்பிட்டது கவினையா? வேறொருவரையா என்று நெட்டிசன்கள் கேள்வி கேட்டுள்ளனர்.