Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img

மூளைக் கட்டி நோயால் இளம் நடிகர் மரணம்

பெங்களூரு: படுகவுடா என அழைக்கப்படும் பத்மநாப கே.எம். கன்னட சீரியல் உலகில் பிரபலமான நபர். மாடலாக இருந்து பின்னாளில் சினிமா மற்றும் சீரியல் பக்கம் வந்தவர் படுகவுடா. அவருக்கு வயது 44. ஒரு தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான, கன்னட ரியாலிட்டி ஷோவான ‘பாட்டே மண்டி கடிகே பந்துரு’வின் இரண்டாம் சீசனில் பங்கேற்றுப் புகழ்பெற்றார்.

திருமணமான படுகௌடா தனது மனைவி மகளுடன் பெங்களூரு யெலஹங்காவில் வசித்து வந்தார். இதனிடையே தான் அண்மைக்காலமாக அவருக்கு உடல்நல குறைவு ஏற்பட்டது. அவருக்கு மூளையில் கட்டி இருந்தது. சிகிச்சை மற்றும் குணமடைவதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்ட போதிலும், அவரது உடல்நிலை மோசமடைந்தபடி இருந்தது. நேற்று முன்தினம் மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட படுகவுடா சிகிச்சை பலனளிக்காததால் நேற்று காலை உயிரிழந்தார். இந்த சம்பவம், கன்னட திரையுலகில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.