Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img

பிஆர் குழு மீது ராசி கன்னா குற்றச்சாட்டு

திரைத்துறையில் தங்களை பிரபலப்படுத்திக்கொள்ள, பிஆர் என்ற கலாசாரம் பரவலாக காணப்படுகிறது. அந்த பிஆர் மூலம் ஒருதரப்பினர், மற்றொரு தரப்பினரின் திரைப்பயணத்தை பாதிக்கும் விதத்தில் செயல்படுகின்றனர். சமீபத்தில் இந்த பிஆர் குறித்து ராசி கன்னா பரபரப்பான குற்றச்சாட்டுகளை சுமத்தியுள்ளார். அவர் கூறுகையில், ‘இப்போது திரைத்துறையில் பிஆர் குழுக்களின் ஆதிக்கம் அதிகமாக இருக்கிறது.

சோஷியல் மீடியாக்களில் ஹைப் உருவாக்கி, சிறிய நடிகர்களையும் பெரிய ஸ்டார்களாக மாற்றும் சக்தி அதற்கு இருக்கிறது. பிஆர் மூலம் கிடைக்கும் புகழ் தற்காலிகமானது மட்டுமே. உண்மையான புகழ் என்பது நம்முடைய வேலை, உழைப்பு, திறமை ஆகியவற்றின் மூலமே கிடைக்கும். அது பிஆர் உருவாக்கும் ஹைப்பால் கிடைக்காது. என்னிடம் தனியாக பிஆர் குழு எதுவும் இல்லை. நான் எனது திறமை மற்றும் உழைப்பின் மீது அதிக நம்பிக்கை வைத்து செயல்படுகிறேன்’ என்றார்.