Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img

வியாபாரமாக மாறும் இன்றைய காதல்: தமன்னா வேதனை

சென்னை: இந்திய பட உலகின் முன்னணி நடிகையாக ஜொலித்து வரும் தமன்னா தமிழ், இந்தி, தெலுங்கு என மாறி மாறி நடித்து வருகிறார். தற்போது தமிழில் சுந்தர்.சி இயக்கத்தில், விஷால் ஜோடியாக ‘புருஷன்’ என்ற படத்தில் நடித்து வருகிறார். தனது பிஸியான ஷூட்டிங்கிற்கு இடையே பேட்டி அளித்த தமன்னா அவரது காதல் குறித்து பேசியுள்ளார்.  அவர் பேசும்போது, ‘‘இன்றைய கால கட்டத்தில் காதல் என்றால் என்ன? உறவு என்றால் என்ன? என்பதில் பலருக்கு குழப்பம் இருந்து வருகிறது.

காதல் ஒரு பரிவர்த்தனையாக மாறும் அபாயம் உள்ளது. எதிர்பார்ப்புகள் அதிகரிக்கும் போது, அது ஒரு வியாபாரம் போல மாறிவிடுகிறது. ஒருவரை ஒருவர் காதலிக்கலாம், ஆனால் அந்த உறவுதான் காதலை வரையறுக்கிறது என்று அர்த்தமில்லை. ஒருவரை உண்மையாக நேசிக்க வேண்டுமெனில், அவர்களுக்கு சுதந்திரம் கொடுக்க வேண்டும்.

நம் எண்ணங்களை இன்னொருவர் மீது திணிப்பதன் மூலம் காதலை நிரூபிக்க முடியாது. காதல் என்பது ஒரே ஒரு அனுபவமாக மட்டுமே இருக்க வேண்டிய அவசியமில்லை. அது வாழ்க்கையில் பலமுறை நிகழக்கூடிய உணர்வு. அந்த உணர்ச்சி வெளிப்புற காரணிகளால் அல்ல, நமக்குள் இருந்து தான் உருவாகிறது’’ என்றார்.