Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img

பிரபல நட்சத்திரங்கள் அருந்தும் குடிநீர் விலை என்ன தெரியுமா..?

திரையுலகைச் சேர்ந்த பிரபலங்கள் மற்றும் விளையாட்டு நட்சத்திரங்கள் தங்களின் உடல் ஆரோக்கியம், உடற்தகுதி மற்றும் அழகைப் பராமரிக்கச் சாதாரண குடிநீருக்குப் பதிலாக, அதிக விலைமதிப்புள்ள பிரத்யேகமான வெளிநாட்டு மற்றும் அல்கலைன் குடிநீரைப் பயன்படுத்துவது வழக்கம்.

அதிக விலைமதிப்புள்ள குடிநீரை அருந்தும் சில முக்கிய இந்திய நடிகர் மற்றும் நடிகைகளின் விவரங்கள் இதோ:

திஷா பதானி, பிளிங் எச்2ஓ நீர், ₹5,000 முதல் ₹28,000 வரை (750 மி.லி பாட்டில்). உர்வசி ரவுடேலா, கருப்பு அல்கலைன் நீர், 1 லிட்டர் ₹3,000 முதல் ₹4,000 வரை. அனுஷ்கா சர்மா, எவியான் இயற்கை ஊற்று நீர், 1 லிட்டர் ₹500 முதல் ₹4,000 வரை (இறக்குமதி செலவைப் பொறுத்து).

மலைகா அரோரா, கருப்பு அல்கலைன் நீர், 1 லிட்டர் ₹3,000 முதல் ₹4,000 வரை. கயாடு லோஹர், சொகுசு பிராண்ட் குடிநீர் ஒரு குறிப்பிட்ட பிரீமியம் பாட்டில் ₹3 லட்சம் வரை என தகவல். டைகர் ஷெராப், கருப்பு அல்கலைன் நீர், 1 லிட்டர் ₹3,000 முதல் ₹4,000 வரை. இந்த நீரின் சிறப்புகள் மற்றும் அதிக விலைக்குக் காரணம்:

பிளிங் எச்2ஓ : இதன் பாட்டில்கள் ஸ்வரோவ்ஸ்கி என்ற படிகங்களால் அலங்கரிக்கப்பட்ட சொகுசு கண்ணாடி பாட்டில்களாகக் கிடைக்கின்றன.

கருப்பு நீர்: இதில் இயற்கையான தாதுக்கள் அதிகம் உள்ளன. இது உடலில் உள்ள அமிலத்தன்மையைக் குறைத்து, அதிக நேரம் நீரேற்றத்துடன் வைத்திருக்க உதவுகிறது.

எவியான் நீர்: பிரான்ஸ் நாட்டின் ஆல்ப்ஸ் மலைப்பகுதியில் உள்ள இயற்கை ஊற்றுகளில் இருந்து எடுக்கப்படும் இந்த நீர், எவ்வித ரசாயனக் கலப்பும் இன்றி மிகத் தூய்மையாகப் பேக் செய்யப்படுகிறது.

இந்தியாவில் ஆன்லைனில் இந்த குடிநீர் பாட்டில்களை வாங்கும்போது விலை குறைவுதான்.

ஆனால் மேலே குறிப்பிட்ட நடிகர், நடிகைகள் இதை அவர்கள் வெளிநாடுகளில் இருந்து நேரடியாக இறக்குமதி செய்யும் சில குறிப்பிட்ட சர்வதேச சொகுசு பிராண்டுகளின் விலையாகும்.