Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img

சந்திராவாக பிறந்தநாள் கொண்டாடிய வாமிகா கபி

சமீபத்தில் வாமிகா கபி தனது பிறந்தநாள் கொண்டாட்ட போட்டோக்களை வெளியிட்டுள்ளார். பாலிவுட் படங்கள் மற்றும் வெப்தொடர்களில் நடித்து ரசிகர்களின் கவனத்தை பெரிதும் ஈர்த்துள்ள அவர், தமிழில் கீதாஞ்சலி செல்வராகவன் இயக்கிய ‘மாலை நேரத்து மயக்கம்’ என்ற படத்தின் மூலம் ஹீரோயினாக அறிமுகமானார். சில ஆண்டுகளுக்கு முன்பு ‘மாடர்ன் லவ் சென்னை’ என்ற ஆந்தாலஜி படத்தில், தியாகராஜன் குமாரராஜா இயக்கிய ‘நினைவோ ஒரு பறவை’ என்ற பாகத்தில் அவர் நடித்திருந்தார். சமீபத்தில் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் ஜோடியாக அவர் நடித்திருந்த ‘டிசி’ என்ற படம் திரைக்கு வந்து மிகப்பெரிய வெற்றிபெற்று, வசூலிலும் புதிய சாதனை படைத்தது. விமர்சன ரீதியாக பாராட்டுகளை பெற்ற இப்படத்தின் மூலம் வாமிகா கபி தனது நடிப்புத்திறமையை நன்கு வெளிப்படுத்தி இருந்தார்.

அவருக்கு பல்வேறு தரப்பு ரசிகர்கள் தங்கள் பாராட்டுகளையும், வாழ்த்துகளையும் தெரிவித்தனர். இப்படத்தில் அவர் ஏற்று நடித்த ‘சந்திரா’ என்ற கதாபாத்திரமாகவே வாழ்ந்ததாக, ரசிகர்கள் அவருக்கு புகழாரம் சூட்டியுள்ளனர். இந்த வரவேற்பின் காரணமாக மிகவும் மகிழ்ச்சி அடைந்துள்ள வாமிகா கபி, கடந்த சில நாட்களுக்கு முன்பு தனது பிறந்தநாளை அதிக உற்சாகத்துடன் கொண்டாடி மகிழ்ந்தார். உடனே அந்த போட்டோக்கள் மற்றும் வீடியோவை சோஷியல் மீடியாவில் பகிர்ந்துள்ள அவர், ‘புதிய தொடக்கத்துக்கு நல்ல காலம் பிறந்ததாக உணர்கிறேன். என்னையும், என்னை சுற்றியிருப்பவர்களையும், நான் சந்திக்க இருப்பவர்களையும் இன்னும் கூட சிறப்பாக புரிந்துகொள்கிறேன்’ என்று குறிப்பிட்டுள்ளார்.