ரஜித் மேனன், ஸ்ரீராம் கார்த்திக், தீப்ஷிகா, நக்ஷா சரண், விஜே பப்பு, ஜி.எம்.குமார், எல்.வி.ஆதவன், ராம்ஸ், ஹலோ கந்தசாமி, தேனி முருகன், ‘பருத்திவீரன்’ சுஜாதா, கராத்தே ராஜா, அட்வகேட் பாபு, ஈஸ்வர் பாபு, மஞ்சு நடித்துள்ள ‘சிட்டுக்குறிஞ்சி’ என்ற படம், வரும் 27ம் தேதி திரைக்கு வருகிறது. ‘குறிஞ்சி மலை மேல’ என்ற பாடலை நடிகை ரம்யா நம்பீசன் பாடியுள்ளார். திருமண பாடலான இதை கார்த்திக் எழுத, மாறா இசை அமைத்துள்ளார். தவிர, மாறா எழுதி ஷில்வி ஷரோனுடன் இணைந்து பாடியிருந்த ‘உள்ளார’ என்ற பாடலும் வெளியாகியுள்ளது.
வீ.ஜெ.மீனாட்சி சுந்தரம் எழுதி இயக்கியுள்ளார். 1983 காலக்கட்டத்துக்காக கொடைக்கானல் மலைச்சரிவுகளில், 80 ஏக்கர் பரப்பளவில் பிரமாண்டமான கிராமத்தை படக்குழுவினர் அமைத்திருந்தனர். ஹங்கேரி புடாபெஸ்ட் ஸ்கோரிங் கம்பெனி ஸ்டுடியோவில் பின்னணி இசை ஒலிப்பதிவு செய்யப்பட்டுள்ளது. பிரான்சிஸ் ராஜ்குமார்.ஆ ஒளிப்பதிவு செய்ய, ராம்ஜி அரங்கம் அமைத்துள்ளார். மகேந்திரன் கணேசன் எடிட்டிங் செய்ய, தீனா நடனப் பயிற்சி அளித்துள்ளார். பிளாக் அண்ட் ஒயிட் மீடியா சொல்யூஷன்ஸ் சார்பில் டி.ஜூட் ஆனந்த், ராஜேஷ்.ஆர், சசி ராம் பிக்சர்ஸ் டாக்டர் கே.எஸ்.செந்தில், கடையனேந்தல் ஆர்.ஏ.பீட்டர் இணைந்து தயாரித்துள்ளனர். தமிழகம் முழுவதும் ஷாலினி சினி கிரியேஷன்ஸ் வெளியிடுகிறது.
