Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img

பல சினிமா மேனேஜர்கள் என்னை ஏமாற்றினார்கள்: சுவாசிகா பகீர்

சென்னை: லப்பர் பந்து, கருப்பு, நூறு சாமி படங்களில் நடித்தவர் சுவாசிகா. சமீபத்தில் சுவாசிகா கொடுத்திருக்கும் பேட்டி ஒன்று சோஷியல் மீடியாவில் டிரெண்டாகியுள்ளது. அந்தப் பேட்டியில் அவர், ‘‘அங்கே போகலாம், இங்கே போகலாம் என்று பல மேனேஜர்கள் ஏமாற்றியிருக்கிறார்கள். அப்போதெல்லாம் சில இயக்குனர்களின் பெயர் மட்டும்தான் கிடைக்கும். ஒரு லட்சம் ரூபாய் கொடுங்கள் என சொல்வார்கள். அம்மா உடனே அனைத்து நகைகளையும் கழற்றிக்கொடுத்துவிடுவார்.

பலமுறை அப்படி நடந்திருக்கிறது. அவர்கள் அழைத்து செல்லும் இடங்களை பார்த்தால் அவ்வளவு பயமாக இருக்கும். அப்போதுதான் அம்மா என்னிடம், இனிமே சினிமா வேண்டாம் என்று சொல்லிவிட்டார். பிறகு மலையாளத்துக்கே சென்று முயற்சி செய்தேன். எப்போதும் என் மீது நம்பிக்கை இருந்தது. மிளகாய் ஸ்பிரே இல்லாமல் நான் எங்கேயும் போனதில்லைல். ஒருநாள்கூட சினிமாவிலிருந்து பின்வாங்க நினைத்ததே இல்லை’’ என்றார்.