Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img

பேச்சுவார்த்தைக்கு அரசு அழைப்பு; சினிமா ஸ்டிரைக் வாபஸ்: தயாரிப்பாளர்கள் சங்கம் அறிவிப்பு

சென்னை: முத்தரப்பு பேச்சுவார்த்தைக்கு தமிழக அரசு அழைப்பு விடுத்துள்ளதால் செப்டம்பர் 1ம் தேதி முதல் நடைபெற இருந்த தமிழ் திரையுலக வேலை நிறுத்தம் வாபஸ் பெறப்பட்டுள்ளது. தமிழ் திரைப்படங்கள் தியேட்டரில் வெளியாகி, 8 வாரங்கள் கழித்துதான் ஓடிடிக்கு தர வேண்டும் என தியேட்டர் அதிபர்கள் வற்புறுத்தினர். இதனால் தயாரிப்பாளர்களுக்கான வியாபாரம் பாதித்தது. இதையடுத்து தியேட்டர் அதிபர்களின் நடவடிக்கையை கண்டித்து செப்டம்பர் 1ம் தேதி முதல் வேலை நிறுத்த போராட்டம் நடைபெறும் என தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம், நடப்பு தயாரிப்பாளர்கள் சங்கம் கூட்டாக அறிவித்தன.

இது குறித்து தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத் தலைவர் ஜி.கே.எம்.தமிழ்குமரன் மற்றும் நிர்வாகிகள் கூட்டாக நேற்று அளித்த பேட்டி: தமிழ் சினிமாவில் நிலவும் தற்போதைய பிரச்னைகள் குறித்து செய்தித்துறை அமைச்சர் ராஜ்மோகனிடம் தெரிவித்தோம். தற்போது நீடிக்கும் சூழல் அப்படியே தொடரட்டும். சட்டசபை கூட்டத் தொடர் முடிந்ததும் தயாரிப்பாளர்கள், வினியோகஸ்தர்கள், தியேட்டர் அதிபர்கள் என முத்தரப்பு பேச்சுவார்த்தைக்கு அரசு ஏற்பாடு செய்து பேசுவோம் என ெதரிவித்தார். தமிழக அரசின் இந்த செயல்பாட்டின்படி செப்டம்பர் முதல் தொடங்க இருந்த வேலை நிறுத்தம் வாபஸ் பெறப்படுகிறது. இவ்வாறு அவர்கள் கூறினர்.