Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img

சினி மினி நியூஸ்

* தற்போது விஜய் சேதுபதி, சாய் பல்லவி நடிக்கும் ‘இஞ்சி வெல்லம்’ படத்தை இயக்கி வரும் மணிரத்னம் அடுத்ததாக சூர்யாவை வைத்து புதிய படத்தை இயக்க உள்ளதாக சொல்லப்படுகிறது. இதன் கதையை சூர்யாவிடம் 8 ஆண்டுகளுக்கு முன்பே மணிரத்னம் கூறிவிட்டதாகவும் தற்போது சில மாறுதல்களுடன் அப்படத்தை உருவாக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

* மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பில் ஹனு ராகவபுடி இயக்கத்தில் பிரபாஸ் நடித்து வரும் ‘ஃபெளஜி’ படம் வரும் டிசம்பர் 3ம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டது. ஆனால் தயாரிப்பு பணிகள் மற்றும் விஎப்எக்ஸ் பணிகள் தாமதமாவதால் படத்தின் வெளியீடு தேதி குறிப்பிடாமல் தள்ளிவைக்கப்படுவதாக அதன் தயாரிப்பாளர் ரவிசங்கர் தெரிவித்துள்ளார்.

* சிவகுமார் முருகேசன் இயக்கும் ‘சேயோன்’ படத்தில் நடித்து வரும் சிவகார்த்திகேயன் தனது 27 மற்றும் 28வது படத்தின் படப்பிடிப்பை அடுத்த மாதம் தொடங்குகிறார். அதன்படி அவரது 27வது படத்தை ராம்குமார் பாலகிருஷ்ணன், 28வது படத்தை சிபி சக்ரவர்த்தி இயக்குகின்றனர்.

* ஏழு கடல் ஏழு மலை’ பட நிகழ்ச்சியில் கலந்துகொண்ட சூரி, ‘நீங்கள் (ரசிகர்கள்) தந்த வெற்றியை தலைக்கு ஏற்றிக்கொண்டு என் இஷ்டப்படி ஆட மாட்டேன். வெற்றியை மரியாதையோடு ஏற்றுக்கொண்டு அடுத்த வேலைக்காக எப்போதும் ஓடிக்கொண்டே இருப்பேன்’ என்று தெரிவித்துள்ளார்.

* நீண்ட காலமாக பட வாய்ப்பு இல்லாமல் இருந்த தெலுங்கு நடிகர் கார்த்திகேயா தனது கார்த்திகேயா கிரியேட்டிவ் வொர்க்ஸ் சார்பில் ‘கம்பேக்’ என்ற படத்தை தயாரித்து, இயக்கி ஹீரோவாக நடிக்கிறார். இப்படத்தில் அவர் குத்து சண்டை வீரராக நடிக்கிறார். அதற்காக கடந்த 6 மாதத்திற்கு மேலாக குத்து சண்டை பயிற்சி பெற்று வருகிறார்.

* வாரிசு’, ‘இறைவன்’, ‘ஹாட்ஸ்பாட் 2’ படங்களில் நடித்தவர் சஞ்சனா திவாரி. ‘தி கோர்ட்’ வெப்சீரிஸிலும் நடித்துள்ளார். தொடர்ந்து நல்ல வேடங்களை தேர்வு செய்து நடிப்பதே நோக்கம் என்கிறார் சஞ்சனா.

* பாலிவுட்டின் காதல் ஜோடிகளான ரன்பீர் கபூர், அலியா பட் இணைந்து நடிக்கும் ‘லவ் அண்ட் வார்’ படத்தை சஞ்சய் லீலா பன்சாலி இயக்குகிறார். இப்படம் அடுத்த ஆண்டு ஜனவரி 21ம் தேதி திரைக்கு வருகிறது. அதனை சிறப்பு போஸ்டர் வெளியிட்டு படக்குழு அறிவித்துள்ளது.

* பா.ரஞ்சித் இயக்கத்தில் ஆர்யா நடிப்பில் கடந்த 2021ம் ஆண்டு வெளியான ‘சார்பட்டா பரம்பரை’ படத்தின் இரண்டாம் பாகத்தின் படப்பிடிப்பு நேற்று முன்தினம் சென்னையில் தொடங்கியது. பா.ரஞ்சித் இயக்கியுள்ள ‘வேட்டுவம்’ என்ற மற்றொரு படம் ரிலீசுக்கு தயாராகி வருவது குறிப்பிடத்தக்கது.

* டோரதி’ படத்திற்கு ஒரு சில காரணங்களால் மலேசியாவில் சென்சார் கிடைப்பதில் சிக்கல் நிலவி வந்த நிலையில் படம் அந்நாட்டில் தடை செய்யப்பட்டுள்ளதாக சொல்லப்படுகிறது. கார்த்திக் சுப்புராஜ் இயக்கியுள்ள இப்படத்தில் கீர்த்தி சுரேஷ், சனந்த், ரிஷிகாந்த் நடித்துள்ளனர். இளையராஜா இசை அமைத்துள்ளார்.

* சிக்மா’ படம் மூலம் இயக்குனராக அறிமுகமாகும் ஜேசன் சஞ்சய், அடுத்த படத்தில் ஹீரோவாக அறிமுகமாகிறார். ‘டியூட்’ கீர்த்தீஸ்வரன் இயக்கும் இப்படத்தில் ஹீரோயினாக மமிதா பைஜு, இசையமைப்பாளராக சாய் அப்யங்கர் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. விரைவில் இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகிறது.

* முண்டாசுப்பட்டி’, ‘ராட்சசன்’ படங்களுக்கு பிறகு ராம்குமார், விஷ்ணு விஷால் கூட்டணியில் உருவாகும் 3வது படம் ‘இரண்டு வானம்’. மமிதா பைஜு ஹீரோயினாக நடிக்கும் இப்படம் வரும் அக்டோபர் 23ம் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.