Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img

சினி மினி நியூஸ்

* பிரேம் குமார் இயக்கத்தில் நானும், ஷிவதாவும் முக்கிய வேடத்தில் நடித்துள்ள புதிய படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்துவிட்டது. அடுத்த ஒரு மாதத்தில் படம் குறித்த அறிவிப்புகள் வெளியாகும். அப்படத்தை மிகுந்த ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கிறேன்’ என்று கூறுகிறார் பஹத் பாசில்.

* வெங்கட் பிரபு இயக்கத்தில் ‘சென்னை 600028’ படத்தின் 2 பாகங்கள் இதுவரை வெளியாகியுள்ளது. இதன் 3ம் பாகத்தின் படப்பிடிப்பு இன்னும் சில நாட்களில் தொடங்கவுள்ளது. அதற்காக சென்னையில் பிரமாண்ட அரங்கு அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது.

* யோகி பாபு, தெலுங்கு நடிகர் சத்யா நடிக்கும் ‘கோல்டன் பாக்கியம்’ படத்தின் டைட்டில் கிளிம்ப்ஸ் வெளியிடப்பட்டுள்ளது. தமிழ் மற்றும் தெலுங்கில் உருவாகும் இப்படத்தை பவன் பசம்செட்டி இயக்குகிறார். இந்த வருட இறுதியில் படம் திரைக்கு வருகிறது.

* அஷ்வத் மாரிமுத்து இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிக்கும் படம் ‘தர்மன்’. சிம்ரன், ராசி கன்னா, ராம் பொதினேனி உள்பட பலர் முக்கிய வேடத்தில் நடிக்கும் இப்படத்தில் தற்போது லீலா இணைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. சமீபத்தில் மைசூரில் அவரது காட்சிகள் படமாக்கப்பட்டதாக சொல்லப்படுகிறது.

* சந்தோஷ் குமார் இயக்கத்தில் மணிகண்டன் நடித்துள்ள ‘மக்கள் காவலன்’ படம் வரும் டிசம்பர் 4ம் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. திவ்யா பாதா, வாகை சந்திரசேகர், ஏ.வெங்கடேஷ் உள்பட பலர் நடிக்கும் இப்படத்துக்கு நிவாஸ் கே.பிரசன்னா இசை அமைக்கிறார்.

* பேசாப் பொருளை பேச துணிந்திருக்கிறார்கள். இயக்குனர் கார்த்திக் சுப்பராஜ் சொல்ல வேண்டியதை திறம்பட சொல்லியிருக்கிறார். கீர்த்தி சுரேஷ், சனந்த், ரிஷிகாந்த் ஆகியோரின் நடிப்பு படத்திற்கு உயிர் சேர்க்கிறது. இளையராஜாவின் இசை மனதை நெகிழ வைக்கிறது’ என்று ‘டோரதி’ படக்குழுவினரை பாராட்டி பதிவிட்டுள்ளார் சூர்யா.

* மலையாளத்தில் கால்பந்து விளையாட்டை மைய்யப்படுத்தி ‘பந்தடிக்காம்’ என்ற 5 பாகங்களை கொண்ட ஆவணப்படம் உருவாகியுள்ளது. நேற்று ஓடிடி தளத்தில் வெளியாகியுள்ள இந்த ஆவணப்படத்திற்கு மம்மூட்டி, கதை சொல்பவராக குரல் கொடுத்துள்ளார். மம்மூட்டி ஒரு விளையாட்டு ஆவணப்படத்திற்கு குரல் கொடுப்பது இதுவே முதன்முறை.

* ஆடை’ படத்தில் நிர்வாண காட்சியில் நடிக்க முதலில் தயங்கினேன். பின்னர் கதைக்கு தேவைப்பட்டதால் நடித்தேன். அந்த காட்சி படமாக்கப்பட்டபோது மிக குறைவான நபர்கள் மட்டுமே அங்கு இருந்தனர். படக்குழுவினரும் என்னை மிகவும் சிறப்பாக கையாண்டனர். இப்போது இருக்கும் புரிதலுடன் மீண்டும் ‘ஆடை’ போன்ற ஒரு கதையில் அப்படி நடிக்க சொன்னால் நான் மறுத்துவிடுவேன்’ என்று தெரிவித்துள்ளார் அமலா பால்.

* நாகார்ஜுனாவின் 100வது படமான ‘கிங் 100’ படத்தை ரா.கார்த்திக் இயக்குகிறார். இதில் வில்லனாக அசோக் செல்வன் நடிப்பதாக தகவல் பரவி வருகிறது. மேலும், தபு, ஐஸ்வர்யா ராஜேஷ், சுஷ்மிதா பட் உள்பட பலர் முக்கிய வேடத்தில் நடிக்கின்றனர்.

* ஷாலினி அஜித்குமார் தயாரிப்பில் ஆதிக் ரவிசந்திரன் இயக்கத்தில் அஜித்குமார் நடிக்கும் ‘டேர் டெவில்’ படத்தில் மோகன்லால் முக்கிய வேடத்தில் நடிக்க இருந்த நிலையில் அவர் விலகியுள்ளார். அவருக்கு பதிலாக மலையாள நடிகர் உன்னி முகுந்தன் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.

* தனுஷின் 56வது படத்தை தமிழரசன் பச்சமுத்து இயக்குகிறார். இப்படத்தின் பூஜை சிவகங்கை மாவட்டத்தில் கடந்த செப்டம்பர் 25ம் தேதி நடைபெற்றது. மதுரையை பின்னணியாக கொண்டு உருவாகும் இப்படத்தில் எஸ்.ஜே.சூர்யா, வடிவேலு, பிரீத்தி முகுந்தன் உள்பட பலர் முக்கிய வேடத்தில் நடிக்கின்றனர். 2027ம் ஆண்டு கோடையில் வெளியாகும் என்று படக்குழு அறிவித்துள்ளது.

* டோரதி படத்தை தொடர்ந்து கார்த்திக் சுப்பராஜ் அடுத்ததாக பிரபுதேவா, கன்னட நடிகர் உபேந்திரா, அதர்வா முரளி ஆகியோரை வைத்து புதிய படத்தை இயக்கி வருகிறார். இதன் முதற்கட்ட படப்பிடிப்பு நிறைவடந்துவிட்டது. அடுத்தகட்ட படப்பிடிப்பு அக்டோபர் 16ம் தேதி தொடங்குகிறது.