Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img

சினி மினி நியூஸ்

* ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் உருவாகி வரும் ‘ஓம்’ படத்தில் தனுஷ், சாய் பல்லவி. ஸ்ரீலீலா இணைந்து அதிரடி நடனம் ஆடிய பாடல் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

* சத்யஜோதி பிலிம்ஸ் தயாரிக்கும் தனது 63வது படத்தில் விக்ரம் நடித்து வருகிறார். ஆனந்த் சங்கர் இயக்கும் இப்படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளது.

* நடிகர் கவின், மோனிகா டேவிட் தம்பதிக்கு நேற்று ஒரு ஆண், ஒரு பெண் என இரட்டை குழந்தை பிறந்துள்ளது. இதுகுறித்து தனது சோஷியல் மீடியாவில், ‘எங்கள் வாழ்க்கையை இரட்டிப்பு மகிழ்ச்சியால் நிறைத்த இறைவனுக்கு நன்றி’ என்று கவின் மகிழ்ச்சியாக பதிவிட்டுள்ளார்.

* இந்தி நடிகை சிவாங்கி பேசுகையில், ‘சிறுவயதில் என் தாயின் நெருங்கிய நண்பர் ஒருவர், நடிகையாக வேண்டும் என்ற எனது ஆசையை பயன்படுத்தி என்னிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டார். நடிக்க வேண்டும் என்றால் கார் ஓட்ட தெரிந்திருக்க வேண்டும் என கூறி, காரின் முன் இருக்கையில் அவரது மடியில் என்னை அமரவைத்து என்னிடம் அத்துமீறினார்’ என்று தெரிவித்துள்ளார்.

* தெலுங்கு படவுலகின் முன்னணி நடிகர்களான பாலகிருஷ்ணா, பவன் கல்யாண், ஜூனியர் என்டிஆர், ராம் சரண் ஆகியோர் அடுத்தடுத்து படப்பிடிப்பில் காயமடைந்து சிகிச்சை பெற்று வருவது ரசிகர்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. இவர்களில் பாலகிருஷ்ணா, பவன் கல்யாண், ராம் சரண் ஆகியோர் அறுவை சிகிச்சை முடிந்து ஓய்வில் இருக்கின்றனர்.

* மெல்பர்ன் இந்திய திரைப்பட விழா வரும் ஆகஸ்ட் மாதம் நடைபெற உள்ளது. 36 மொழிகளில் 130க்கும் அதிகமான படங்கள் திரையிடப்பட உள்ள இந்நிகழ்ச்சியில் நடுவராக ரிஷப் ஷெட்டி கலந்து கொள்கிறார்.

* கேரளாவில் சோஷியல் மீடியா மூலம் பிரபலமான கல்யாணி அனில் என்ற இன்புளூயன்சர் ‘குட் நியூஸ்’ என்ற படத்தின் மூலம் தமிழில் ஹீரோயினாக அறிமுகமாகிறார். அஸ்வின் குமார், ஜெயராம் உள்பட பலர் நடிக்கும் இப்படத்தை பாண்டிராஜிடம் உதவி இயக்குனராக பணியாற்றிய நாகேந்திர முருகன் இயக்குகிறார்.

* எனது அனுபவங்களில் இருந்து தோன்றும் எண்ணங்களையே நான் அடிக்கடி சோஷியல் மீடியாவில் பகிர்கிறேன். இதை பார்த்து நான் எப்போதும் ஏதோ ஒரு பிரச்னையில் இருப்பதாக சிலர் நினைத்து கொள்கிறார்கள். ஆனால் அது உண்மையல்ல. யாருக்காவது பயனுள்ளதாக இருக்கும் என்பதற்காகவே அவற்றை பகிர்கிறேன்’ என்று நடிகை ஆத்மிகா தெரிவித்துள்ளார்.