* மானஸா வாரணாசி
ராஜமவுலி இயக்கத்தில் மகேஷ் பாபு, பிரித்விராஜ் சுகுமாரன், பிரியங்கா சோப்ரா நடிப்பில் பான் வேர்ல்ட் படமாக உருவாகி வருகிறது ‘வாரணாசி’. இப்படத்திற்காக ஏற்கனவே 6 பாடல்களை முடித்துள்ள எம்.எம்.கீரவாணி, வரும் செப்டம்பர் மாதம் முதல் பின்னணி இசைக்கான பணியை தொடங்கவுள்ளார். அடுத்த ஆண்டு ஏப்ரல் 7ம் தேதி இப்படம் திரைக்கு வருகிறது.
* கடந்த சில வருடங்களாக உடல் பருமன் காரணாமாக பல்வேறு விமர்சனத்தை சந்தித்து வந்த நடிகை நிவேதா தாமஸ் தற்போது திடீரென உடல் எடையை குறைத்து போட்டோ வெளியிட்டு ரசிகர்களை வியப்பில் ஆழ்த்தியுள்ளார்.
* இந்தி நடிகை கஜோல் மும்பையில் அவருக்கு சொந்தமான உள்ள கமர்ஷியல் கட்டிடத்தை தனியார் வங்கிக்கு வாடகைக்கு விட்டுள்ளார். அதன்மூலம் மாதம் ரூ.6.9 லட்சம் வீதம் அடுத்த 9 ஆண்டுகளுக்கு ரூ.8.6 கோடி வருமானம் பெறுவார் என்று கணக்கிடப்பட்டுள்ளது.
* ஹனு ராகவபுடி இயக்கத்தில் பிரபாஸ் நடிக்கும் ‘ஃபெளஜி’ படம் வரும் டிசம்பர் 3ம் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டதால், சந்தீப் ரெட்டி வங்கா இயக்கத்தில் பிரபாஸ் நடித்து வரும் ‘ஸ்பிரிட்’ படம் தாமதம் ஆகும் என்று சொல்லபடுகிறது.
* நடிகைகளுக்கு திருமணம் ஆகிவிட்டால், அவர்களை ஓரங்கட்டி, முடக்க பார்க்கிறார்கள். மார்கெட் உச்சத்தில் இருந்தாலும் சில நடிகைகளுக்கு இப்படித்தான் நடக்கிறது’ என்று ஆதங்கம் தெரிவித்துள்ளார் காஜல் அகர்வால்.
* நிறைய படங்களில் நடிக்க வேண்டும் என எனக்கு எந்தவித கட்டாயமும் இல்லை. படங்களின் எண்ணிக்கையை உயர்த்துவதை விட மக்கள் மனதில் நிற்கும்படியான கதைகளையும், என் வயதுக்கு ஏற்ற கேரக்டர்களை தேர்ந்தெடுத்து நடிக்கவே விரும்பிகிறேன்’ என்று கூறியுள்ளார் அதிதி ஷங்கர்.
* அஷ்வத் மாரிமுத்து இயக்கத்தில் ரஜினிகாந்த் மருத்துவராக நடிக்கும் படம் ‘தர்மன்’. இதில் சிம்ரன், ராசி கன்னா உள்பட பலர் முக்கிய வேடத்தில் நடிக்கின்றனர். இப்படத்தில் தெலுங்கு நடிகர் ராம் பொதினேனி வில்லன் ரோலில் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
* இந்திய திரையுலக வரலாற்றில் முதல்முறையாக ‘டாக்ஸிக்’ படம் இந்தியா முழுவதும் 12 ஆயிரம் திரைகளில் வெளியாகிறது. கீது மோகன்தாஸ் இயக்கி, யஷ், நயன்தாரா, கியாரா அத்வானி, ஹூமா குரேஷி, ருக்மிணி வசந்த், தாரா சுதாரியா உள்பட பலர் நடித்துள்ள இப்படம் வரும் 26ம் தேதி வெளியாகிறது.
* ‘மைசா’ படத்தின் படப்பிடிப்பில் காயமடைந்து ஓய்வில் இருக்கிறார் ராஷ்மிகா மந்தனா. ‘வீட்டிலேயே என் பொழுதுகள் கடந்து செல்கின்றன. கட்டாய ஓய்வு கவலை அளிக்கிறது. பிசியான நாட்களை மிகவும் மிஸ் செய்கிறேன். உடல்நலம் தேறி மீண்டும் படப்பிடிப்பில் பங்கேற்க ஆர்வமாக இருக்கிறேன்’ என்று சோஷியல் மீடியாவில் பதிவிட்டுள்ளார்.
