* ராஜமவுலி இயக்கத்தில் ‘வாரணாசி’ பான் வேர்ல்ட் படத்தில் நடித்து வரும் மகேஷ் பாபு அடுத்ததாக அனில் ரவிபுடி இயக்கும் புதிய படத்தில் நடிக்கவுள்ளதாக தகவல் பரவுகிறது. அனில் ரவிபுடி தற்போது வெங்கடேஷ் நடிக்கும் ‘ஜனவரி 12 விடுதலா’ என்ற படத்தை இயக்கி வருகிறார்.
* ரஜினிகாந்த் ஜென்-ஸி ரசிகர்களையும் கவரும் வகையில் மிகவும் உற்சாகமான தோற்றத்திலும், மனநிலையிலும் இருக்கிறார். அவரை போல் இனிமையான ஒரு மனிதரை நான் பார்த்ததே இல்லை. நெல்சன் திலீப்குமார் சொன்னது போலவே, அவர் ஒரு அற்புதமான மனிதர். என்னை பார்க்கும் போதெல்லாம் அவர் எழுந்து நிற்பார். இதற்கான காரணத்தை ஒருமுறை ரஜினி சாரிடம் கேட்டபோது, ‘இது கலைக்கும் இயக்குனருக்கும் நான் கொடுக்கும் மரியாதை’ என்றார்’ என ரஜினிகாந்த் பற்றி இயக்குனர் அஸ்வத் மாரிமுத்து கூறியுள்ளார்.
* ஃபோர்ப்ஸ் பத்திரிகை வெளியிட்ட 2026ம் ஆண்டு இந்தியாவின் டாப் 100 பிரபலங்களின் பட்டியலில் தெலுங்கு நடிகர்கள் ராம் சரண் மற்றும் அல்லு அர்ஜுன் இடம்பெற்றுள்ளனர்.
* ஜீவாவின் 47வது படமாக உருவாகும் ‘ஜாலியா இருந்த ஒருத்தன்’ என்ற படத்தை ராஜேஷ் இயக்கி வருகிறார். 16 ஆண்டுகளுக்கு பிறகு இக்கூட்டணி இணைவதால் படத்திற்கு அதிக எதிர்பார்ப்பு இருக்கிறது. இப்படத்தின் முதல் சிங்கிள் பாடல் இன்று மாலை 6 மணிக்கு வெளியாகிறது.
* நான் நிஜ வாழ்க்கையில் சிகரெட் பிடிக்க மாட்டேன், மது அருந்த மாட்டேன். முடிந்தளவு அதை படங்களிலும் தவிர்க்க முயற்சி செய்கிறேன். கதைக்கும் அந்த கேரக்டருக்கும் தேவைப்பட்டால் மட்டுமே அதுபோன்ற காட்சிகளில் நடிப்பேன். இந்த சமூகத்துக்கு கெடுதல் செய்யக் கூடாது என்று நினைக்கிறேன்‘ என்று நடிகர் கவின் தெரிவித்துள்ளார்.
* டாக்ஸிக் படத்தின் எதிர்மறையான விமர்சனத்திற்கு அதன் இயக்குனர் கீது மோகன்தாஸும் ஒரு முக்கிய காரணம் என்று நெட்டிசன்களும், யஷ் ரசிகர்களும் அவரை கடுமையாக சாடி வருகின்றனர். கீது மோகன்தாஸை விமர்சித்து மீம்ஸ்களும், ட்ரோல்களும் அதிகளவில் சோஷியல் மீடியாவில் பரவி வருகிறது.
* ராகுல் சங்கிரித்யன் இயக்கத்தில் விஜய் தேவரகொண்டா, ராஷ்மிகா மந்தனா நடிக்கும் ‘ரணபலி’ படம் வரும் செப்டம்பர் 11ம் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்ட நிலையில் தற்போது அதன் வெளியீட்டு தேதி அக்டோபர் 16ம் தேதிக்கு தள்ளிவைக்கப்பட்டுள்ளது.
* சல்மான் கானுக்கு பல ஆண்டுகளாக பாடி டபுள் (டூப் ஆர்ட்டிஸ்ட்) நடிகராக பணியாற்றியவர் பர்வேஸ் காஜி. அவருக்கு திடீரென உடல்நலக் குறைபாடு ஏற்பட்டு இதயத்தில் பிரச்னை இருப்பது கண்டறியப்பட்டது. இதையறிந்த சல்மான் கான், பர்வேஸ் காஜியின் மொத்த மருத்துவ செலவையும் ஏற்று, ஆபரேஷனுக்கான அனைத்து ஏற்பாடுகளையும் செய்துள்ளார்.
* இருமுடி கட்டு படத்தில் பெண் குழந்தைக்கு தாயாக நடித்த பிரியா பவானி சங்கர், அதுகுறித்து பேசுகையில், ‘அம்மாவாக நடிப்பதில் எனக்கு எந்தவிதமான தயக்கமும் இல்லை. எனக்கு 20 வயதில் திருமணமாகி இருந்தால் இப்போது எனக்கு குழந்தை இருந்து இருக்கும்’ என்று கூறியுள்ளார்.
