Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img

ஆடை நிறுவனம் மீது திரிஷா பரபரப்பு புகார்

சென்னை: நடிகை திரிஷா தனது வீட்டிற்கு டெலிவரி செய்யப்பட்ட ஆடைகளின் தரம் குறித்து ஃபேஷன் ரீடெய்ல் நிறுவனமான ஜாராவை (Zara) பகிரங்கமாக விமர்சித்துள்ளார். மேலும், தொடர்ந்து மூன்றாவது முறையாக தனக்கு வந்த ஆடைகளில் உடல் துர்நாற்றம் வீசியதாக அவர் தெரிவித்துள்ளார். திரிஷா தனது இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் இந்த பிராண்டின் அதிகாரப்பூர்வ கணக்கு மற்றும் அதன் வாடிக்கையாளர் சேவை கணக்கைக் குறிப்பிட்டு ஒரு பதிவைப் பகிர்ந்துள்ளார். அவர் என்ன ஆடை ஆர்டர் செய்தார் என்பதை வெளிப்படுத்தவில்லை என்றாலும், அவரது புகார் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

‘‘அன்பான @zara @zaracare, உங்களுக்கு ஒரு பணிவான வேண்டுகோள். அடுத்த முறை நாங்கள் ஹோம் டெலிவரி செய்ய ஆர்டர் செய்யும்போது, உங்கள் ஆடைகளில் உடல் துர்நாற்றம் (லேசாகக்கூட) வீசாமல் இருப்பதை தயவுசெய்து உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள். இது தொடர்ந்து 3-வது முறை நடக்கிறது. இது மிகவும் அருவருப்பானது. பேக் செய்வதற்கு முன்பாவது அதை கொஞ்சம் மோந்து பாருங்கள்’’ என்று அவர் எழுதியுள்ளார்.