Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img

அதிகமான நபர்களால் காப்பியடிக்கப்பட்ட இயக்குனர் கிரிஷ் ஏ.டி

மலையாளத்தில் ஹிட்டான ‘பிரேமலு’, தற்போது ‘பிரேம் கீட்டனு’ என்ற பெயரில் இந்தியில் ரீமேக் செய்யப்பட்டுள்ளது. வீர் பஹாரியா ஹீரோவாக நடித்துள்ளார். வரும் அக்டோபர் 2ம் தேதி படம் திரைக்கு வருகிறது. இந்நிலையில், ‘பிரேமலு’ இந்தி ரீமேக் பற்றி ‘பிரேமலு’ படத்தின் இயக்குனர் கிரிஷ் ஏ.டி அளித்த பேட்டியில், ‘ஒரு படம் என்பது ஒரு மனிதனின் கைரேகை போன்றது. ஒரு இயக்குனரின் பாணியை இன்னொருவரால் அப்படியே ரீமேக்கோ, ரீ-கிரியேட்டோ செய்ய முடியாது. அதற்கு என்னையே உதாரணமாக எடுத்துக்கொண்டால், வேணு நாகவள்ளி போன்றவர் இயக்கிய படத்தை பார்த்த நிமிடத்திலேயே என்னால் அதை அடையாளம் கண்டுபிடிக்க முடியும். அது எப்படி என்னால் முடிகிறது என்று விவரிக்க தெரியாவிட்டாலும், அதை என்னால் உணர முடியும்.

நல்ல இயக்குனராக இருந்தாலும் சரி, சுமாரான இயக்குனராக இருந்தாலும் சரி, அவர்கள் இருவருக்குமே கண்டிப்பாக ஒரு தனித்துவமான முத்திரை இருக்கும். இந்த உலகில் குவென்டின் டாரண்டினோதான் அதிக நபர்களால் காப்பியடிக்கப்பட்ட இயக்குனராக இருப்பார். அவருடைய பாணியை யாராவது அப்படியே ஃபாலோ செய்ய முயற்சிக்கும்போது, ‘ஏன் இவர்கள் இவ்வளவு மேலோட்டமாக காப்பி செய்கிறார்கள்?’ என்று நான் யோசிப்பேன். ஒரு படம் நீங்கள் நினைத்த மாதிரி உருவாக்கப்படுவதற்கு அந்த இயக்குனரின் ஆளுமைதான் காரணம். அதை வேறொரு இயக்குனரால் நிச்சயமாக உருவாக்க முடியாது. உங்களிடமும் நிச்சயமாக ஒரு தனித்துவமான முத்திரை இருக்கும். அதை நீங்கள் முயற்சி செய்து கண்டறிய முடியும்’ என்றார்.