Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img

கோல்ட் கால் விமர் சனம்...

பெங்களூருவில் 4 இளைஞர்களுக்கு தனியார் நிறுவனத்தில் மார்க்கெட்டிங் எக்ஸிகியூட்டிவ் வேலை கிடைக்கிறது. திடீரென்று ஒரு சிறுவன் கடத்தப்படுகிறான். அந்த பழி 4 இளைஞர்களின் மீது விழ, இந்த இடியாப்ப சிக்கலில் இருந்து அவர்கள் தப்பித்தார்களா, இல்லையா என்பது மீதி கதை. கடந்த காலத்தையும், நிகழ்காலத்தையும் இணைத்து, காட்சிகளை விறுவிறுப்பாக நகர்த்தியுள்ளார் இயக்குனர் தம்பிதுரை.

4 இளைஞர்களின் கேரக்டர்கள் காமெடிக்கு உத்தரவாதம் அளித்துள்ளன. சித்து மூலிமணி, சந்தோஷ், ஸ்ரீவைஷ்ணவ், கிருஷ்ணா விஜய், பாலாஜி, ஸ்ரீகாந்த் ஆகியோர் இயல்பாக நடித்துள்ளனர். அமிதா ரங்கநாதா, நிஷா ஹெக்டே, மேரி லிட்டி, கீர்த்தனா புல்கி ஆகியோர், கதையின் நகர்வுக்கு பெரிதும் உதவியுள்ளனர்.

சரவணன் ஒளிப்பதிவு, ஓகே ரகம். பிரணவ் கிரிதரன் பின்னணி இசை, இதம். பாலாஜி ராஜசேகர், தம்பிதுரை, நுதன், நிதின் சாம் ரெஜினோல்ட் ஆகியோரின் வசனங்கள் கலகலப்பாக இருக்கின்றன. காமெடி திரில்லரில் கடத்தலை இணைத்து இயக்கியுள்ள தம்பிதுரை, அடுத்து வரும் காட்சிகளை யூகிக்க முடிவதை தவிர்த்து இருக்கலாம்.