Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img

காமெடி கதை பூவரசன் பூங்குழலி

சென்னை: திரைத்துறையில் 14 ஆண்டுகால அனுபவம் கொண்ட சம்பத் குமார்.ஆ இயக்கத்தில், ம. தேச ராணி தயாரிப்பில் உருவாகி வரும் ‘பூவரசன் பூங்குழலி’ திரைப்படத்தின் படப்பிடிப்பு மேட்டூர் மற்றும் சேலத்தின் முக்கிய பகுதிகளில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது .

முனி தீக்ஷி பிலிம்ஸ் வழங்கும் இத்திரைப்படம், 35 ஆண்டுகளுக்கு முன்பு பிரிந்த ஒரு காதல் ஜோடி மீண்டும் சந்திக்கும் வாழ்வியல் பின்னணியை முழுக்க முழுக்க நகைச்சுவை ததும்பும் திரைக்கதையுடன் கொண்டு உருவாகியுள்ளது. இப்படத்தில் ஒயின்ஸ் ரவி மற்றும் ஜீவிதா முதன்மை கதாபாத்திரங்களில் நடிக்க, இளம் வயது நாயகனாக தங்கவேல் நடித்துள்ளார். ‘பயாஸ்கோப்’ திரைப்படத்தின் ஒளிப்பதிவாளரான முரளி கணேஷ் இப்படத்திற்கு ஒளிப்பதிவு செய்ய, சாய் நரேஷ்குமார் இசையமைக்கிறார்.