Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img

கமாண்டோவின் லவ் ஸ்டோரி: விமர்சனம்

ராணுவத்தில் பணியாற்றும் வீராவும், ஒரு பெண்ணும் காதலிக்கின்றனர். பயங்கரவாத தாக்குதலில் வீரா மரணம் அடைகிறார். அந்த பெண்ணுக்கு வீராவின் வாரிசை பெற்றெடுக்க சந்தர்ப்பம் கிடைக்கிறது. ஆனால், அதன் பிறகான பிரச்னைகளே மீதி கதை. வீரா கேரக்டரில் இயக்குனர் வீர அன்பரசு இயல்பாக நடித்துள்ளார். அவரது காதலி ஏஞ்சல், கனமான வேடத்தை கச்சிதமாக செய்துள்ளார். அடிக்கடி கவர்ச்சி காட்டியுள்ளார். வீராவின் மகன் ஆகாஷ் முத்து நடிப்பிலும், நடனத்திலும் தேறுகிறார். மற்றும் ‘சூப்பர் குட்’ சுப்பிரமணி, ‘வாழை’ ஜானகி, பிருத்விராஜ், ‘பாய்ஸ்’ ராஜன், ரோபோ சங்கர், ஸ்ரீதேவி, பூர்ணிமா, சுஷ்மிதா ஆகியோரும் நன்கு நடித்துள்ளனர். வில்லியம்ஸ் ஒளிப்பதிவு நேர்த்தி. இளையராஜாவின் அண்ணன் பாவலர் வரதராஜனின் மகன் சிவராமன் இசையில் பாடல்கள் கேட்கும் ரகம். கார்த்திக்ராஜாவின் பின்னணி இசை கூடுதல் பலம். எழுதி இயக்கிய வீர அன்பரசு, வழக்கமான படங்களின் பாணியிலேயே கிளைமாக்சில் எதிர்பாராத திருப்பத்தை கொடுத்துள்ளார்.