Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img

சுமார் ரூ.7,000 கோடி நஷ்ட ஈடு கேட்கும் லெஜெண் பட நடிகை

தமிழில் லெஜெண் படத்தில் நடித்த நடிகை ஊர்வசி ரவுடேலா அமெரிக்காவின் லாஸ் ஏஞ்ஸ்சை சேர்ந்த AI நிறுவனத்திடம் இருந்து சுமார் ரூ.7,000 கோடி நஷ்ட ஈடு கேட்டு வழக்கு தொடரவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. AI நிறுவனம் தனது பெயர், புகைப்படங்கள் மற்றும் காணொலிகளை அனுமதியின்று பயன்படுத்தியதாக அவர் குற்றம்சாட்டியுள்ளார்.

இதற்காக அந்த நிறுவனத்திடம் இருந்து சுமார் ரூ.7,000 கோடி நஷ்ட ஈடுகேட்டு வழக்கு தொடரவுள்ளதாகவும் கூறப்படுகிறது. இதற்கு முன்பும் பல முன்னனி நடிகர், நடிகைகள் தங்களது பெயர் மற்றும் புகைப்படங்களை அனுமதியின்றி பயன்படுத்த நீதிமன்றத்தின் மூலம் தடை பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.